பிரபல நடிகையின் இறுதிச் சடங்கு.. காசு இல்லாமல் தவித்த குடும்பம்!.. யாருக்கும் தெரியாமல் உதவி செய்த கேப்டன்..

vijayakanth
தமிழ் சினிமாவில் ஒரு கருப்பு எம்ஜிஆராக இன்றளவும் பேசப்படுபவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆரை மக்கள் எந்த அளவு கொண்டாடிக் கொண்டு வருகிறார்களோ அதே அளவுக்கு விஜயகாந்தை கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக ஒருவர் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது, அவர் போனபிறகு தான் தெரியும் என்று சொல்வார்கள்.

vijayakanth
எப்பேற்பட்ட மனிதர்
ஆனால் விஜயகாந்த் விஷயத்தில் இருக்கும் போதே அவரை பற்றி மனதார புகழ்ந்து வருகிறார்கள் என்றால் அந்த மனுஷன் எந்த அளவுக்கு குணம் படைத்தவர் என்பதை நம்மால் கணிக்க முடிகின்றது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இப்படி பட்ட நல்ல குணம் படைத்தவரை பார்க்க விடாமல், பேச விடாமல் விதி கட்டிப் போட்டு விட்டது என்பதை நினைக்கும் போது தான் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.
விஜயகாந்தை சுற்றி இருப்பவர்கள், அவரோடு பயணித்தவர்கள், அவரால் உதவி பெற்றவர்கள் என விஜயகாந்தை பற்றி கூறும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த வகையில் அவரை உயிராக கடவுளாகவே நினைக்கும் நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு விஷயத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்தார்.

kunjarammal
நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டனின் பெயர்
அதாவது இப்போது நடிகர் சங்க கட்டிடம் பாதி கட்டி முடிந்த நிலையில் சமீபத்தில் விஷால் ‘கட்டிடம் முடிந்ததும் விஜயகாந்த் சாரை பெருமைப்படுத்தும் ஒரு விழாவை நடத்தலாம் என திட்டமிட்டிருக்கிறோம்’ என்று கூறியிருந்தார். அதை பார்த்த மீசை ராஜேந்திரன் விஜயகாந்தை பெருமை எல்லாம் படுத்தவேண்டாம் , கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என போற்கொடி தூக்கியுள்ளார்.
மேலும் பேசிய மீசை ராஜேந்திரன் பல நடிகர்களின் கண்ணீரை துடைத்தவர் கேப்டன் என்றும் அதற்கான ஒரு சம்பவத்தையும் அவர் கூறினார். சினிமாவில் தாலாட்டு பாடுதற்கென இருந்த பாடகியும் நடிகையுமான மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாளின் இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் தவித்த குஞ்சரம்மாளின் குடும்பம் கேப்டனை அணுகியதாம். அப்போது கேப்டன் மீசை ராஜேந்திரனை அழைத்து இந்த மாதிரி அங்கு சென்று 10000 ரூபாயை கையில் கொடுத்து அதை யாருக்கும் தெரியாமல் குஞ்சரம்மாளின் மகளிடம் கேப்டன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டு வந்து விடு என்று சொன்னாராம்.

meesai rajendran
இப்படி பல பேருக்கு உதவிய கேப்டன் அதோடு நிற்காமல் இப்போது கட்டிடம் கட்டுகிறார்கள் என்றால் அந்த இடத்தை மீட்டு தந்ததே கேப்டன் தான். அதனால் அவர் பெயர் தான் வைக்க வேண்டும் என உணர்ச்சிப் பொங்க கூறினார்.
இதையும் படிங்க : பாதாளத்தில் கிடந்த ராஜ்கமல் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்!.. யாருப்பா அவரு?..