ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகர்!. அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் படங்கள்!.

Vijayakanth: நடிகர் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்கிற செய்திதான் இன்று காலை எல்லோருக்கும் அதிர்ச்சியாக துவங்கியது. நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல, மனிதாபிமானம் மிக்க, எளிய மனிதராகத்தான் அவர் பார்க்கப்பட்டு வருகிறார். இந்த புகழ் அவருக்கு எப்போதும் இருக்கும். இதுதான் அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆவலுடன் சென்னை வந்து பல அவமானங்களையும் தாண்டி, திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பெரிய ஹீரோவாக மாறி ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கே போட்டியாக வந்தார். 80,90களில் விஜயகாந்தின் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது. ரஜினியை விட அதிக சில்வர் ஜுப்ளி கொடுத்த நடிகர் என விஜயகாந்தை பலரும் திரையுலகில் சொல்வதுண்டு. அப்படி விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படங்களைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.
இதையும் படிங்க: புரட்சித்தலைவர் – புரட்சிக்கலைஞர் இறப்பில் இருக்கும் ஒற்றுமை! கருப்பு எம்ஜிஆராகவே வாழ்ந்து மறைந்த கேப்டன்
வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பாட்டுக்கு ஒரு தலைவன், என் ஆசை மச்சான், வானத்தை போல ஆகிய திரைப்படங்கள் 175 நாட்கள் ஓடியது. இதை ஜில்வர் ஜூப்ளி என சினிமாவில் சொல்வார்கள். அதேபோல், பூந்தோட்ட காவல்காரன் படம் 180 நாட்களும், செந்தூரப்பூவே திரைப்படம் 186 நாட்களும், ஊமை விழிகள் படம் 200 நாட்களும் ஓடியது.
புலன் விசாரணை திரைப்படம் 220 நாட்களும், மாநகர காவல் திரைப்படம் 230 நாட்களும், கேப்டன் பிரபாகரன் படம் 300 நாட்களும், சின்ன கவுண்டர் திரைப்படம் 315 நாட்களும் ஒடி சாதனை படைத்தது. மற்ற நடிகர்களுக்கு ஒரு வெற்றி பட்டியல் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இதையும் படிங்க: மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கேப்டன்!.. விஜயகாந்தின் இவ்ளோ புகழுக்கும் இதுதான் காரணமாம்!…
அதேபோல், வல்லரசு திரைப்படம் 112 நாட்களும், சேதுபதி ஐபிஎஸ் 150 நாட்களும், ரமணா திரைப்படம் 150 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. பலமுறை ரஜினி படங்களோடு வெளியான விஜயகாந்த் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற்ற சம்பவமும் நடந்திருக்கிறது.
விஜயகாந்தின் 'சின்ன கவுண்டர்' படத்தை பார்த்துதான் அப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரை அழைத்து எனக்கும் அப்படி ஒரு கதையை உருவாக்குங்கள் என ரஜினி கேட்டுக்கொண்டார். அப்படி உருவான திரைப்படம்தான் 'எஜமான்' என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணே என்னை மன்னிச்சிடுங்கண்ணே!.. கதறி அழுது வீடியோ போட்ட விஷால்….