Connect with us
VKanth

Cinema History

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கேப்டன்!.. விஜயகாந்தின் இவ்ளோ புகழுக்கும் இதுதான் காரணமாம்!…

எம்ஜிஆருக்குப் பிறகு கிட்டத்தட்ட 90 சதவீதம் அவரது குணங்கள் பொருந்திப் போகிறவர் கேப்டன் விஜயகாந்த். அவரது இறப்பு பல லட்சம் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த். இவரது ஆரம்பகால படங்களைப் பார்த்தால் பக்கத்து வீட்டு இளைஞனைப் போலவே இருந்தார். சினிமாவுக்கான பிம்பமே இவரிடம் கிடையாது. சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை படங்களைப் பார்த்தாலே தெரியும்.

80 காலகட்டத்தில் சிவப்பு மல்லி போன்ற படங்களைப் பார்க்கும்போது இவர் ஒரு முற்போக்குவாதி என்றே பலரும் எண்ணினர். அலை ஓசை படத்தில் வரும் போராடா ஒரு வாளேந்தடா என்ற பாடல் இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளில் இன்றும் ஒலிப்பதை நாம் காணலாம்.

இதையும் படிங்க… அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்த்!.. கேலி செய்தவர்கள் முன் ஜெயித்து காட்டிய கேப்டன்…

வில்லனாக நடிக்க பலரும் அவரை அழைத்தபோதும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த பிறகு அவருக்கு வேறு ஒரு பரிமாணம் கிடைத்தது. மது அருந்துவது, புகைபிடிப்பது என வரும் எந்தக் காட்சிகளிலும் விஜயகாந்த் நடித்ததில்லை. ரசிகர்கள் மூலம் பல மக்கள் தொண்டுகளை ஆற்றியவர் விஜயகாந்த். உதவும் குணம் கொண்டவர். அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே… என்ற பாடல் தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது.

Vijayakanth

Vijayakanth

புதிய முயற்சிகளுடன் களம் இறங்கும் புதுப்புது இயக்குனர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுப்பாராம். புதிதாக களம் இறங்கும் இயக்குனர்கள் விஜயகாந்த் கால்ஷீட் நமக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் சினிமாவுக்கே வருவார்களாம்.
ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் விஜயகாந்த். எப்போதும் இவரைச் சுற்றிலும் நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்களாம். முக்கியமான காரியங்களைச் செய்யும்போதெல்லாம் அவர்களிடம் தான் ஆலோசனைகள் கேட்பாராம். மக்கள் மனதில் என்றும் நிரந்தர கேப்டன்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top