போண்டாமணி கடனை கேப்டன் அடைச்சாரா? அதெல்லாம் இல்லைங்க.. நடிகர் சொன்ன திடுக்கிடும் தகவல்

Published on: January 23, 2024
bonda
---Advertisement---

Actor Bondamani: தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் போண்டாமணி. வடிவேலுவுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் தன் நகைச்சுவை திறமையை காட்டி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். சமீபத்தில்தான் போண்டாமணியின் மரணமும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. உடல் நிலை சரியில்லாமல் இருந்த போண்டாமணி சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த நிலையில் அவர் மறைவிற்கு பிறகு போண்டாமணியின் குடும்பத்திற்கு விஜயகாந்த் பண உதவிகளை செய்தார் என்றும் போண்டாமணியின் 12 லட்ச கடனை ஒரே செக்கில் கொடுத்து விஜயகாந்த் தீர்த்து வைத்தார் என்றும் அதுமட்டுமில்லாமல் கையில் ஒரு லட்சம் கொடுத்தனுப்பினார் என்றும் பல செய்திகள் ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருந்தன.

Also Read

இதையும் படிங்க: பிரதீப் லைப்பை மாயாவும், பூர்ணிமாவும் காலி செய்து விட்டனர்… பொளந்துவிட்ட விஷ்ணு!…

ஆனால் அதெல்லாம் பொய். அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜயகாந்த் காதுக்கு எதுவும் போகவில்லை. ஏனெனில் அவர்தான் கிட்டத்தட்ட 5 வருடமாக எதையும் நியாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய நிலையிலேயே இல்லையே என பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் ஒரு பேட்டியில் கூறினார். அதுவும் மீசை ராஜேந்திரன் மூலமாகத்தான் அந்த பணத்தை விஜயகாந்து கொடுத்து அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

உண்மையிலேயே மீசை ராஜேந்திரன் கொடுத்தது 10000 ரூபாயாம். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10000 ரூபாய் கொடுப்பார்களாம். அந்த முறையில்தான் மீசை ராஜேந்திரனும் 10000 வந்து கொடுத்தாராம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 25வது படம் இந்த படத்தின் இரண்டாம் பாகம்!.. செமயா ஸ்கெட்ச் போட்ட எஸ்.கே..

அப்போது போண்டாமணி குடும்பத்தாரிடம் மீசை ராஜேந்திரன் ‘அண்ணியார் கேட்டதாக சொல்ல சொன்னார்கள். எதாவது உதவி வேண்டுமென்றால் அண்ணியாரை வந்து பார்க்க சொன்னார்கள்’ என பிரேமலதா குறித்து போண்டாமணியின் குடும்பத்திடம் மீசை ராஜேந்திரன் கூறிவிட்டு சென்றாராம்.

அதனால் போண்டாமணி இறந்து இன்றுடன் 31 நாள்கள் ஆகின்றதாம். அது சம்பந்தமான காரியங்களை செய்த பின்னர் பென்ஞ்சமினும் போண்டாமாணியின் குடும்பமும் சென்று பிரேமலதாவை சந்திக்க இருப்பதாக பெஞ்சமின் கூறினார்.

இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் சூர்யாவா? யார் டைரக்டர் தெரியுமா?