நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்... இது எப்ப நடந்தது தெரியுமா?!..

by சிவா |
premalatha
X

Vijayakanth: கடந்த 28ம் தேதி தமிழகத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது நடிகர் விஜயகாந்தின் மரணம்தான். தேமுதிக தொண்டர்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் அது பேரிடியாக இருந்தது. விஜயகாந்த் ஒரு நல்ல் மனிதர், இரக்க சுபாவம் உள்ளவர், எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் கொண்டவர் என்பதால்தான் பலரும் அவரின் இறப்புக்காக வருந்தினார்கள்.

தனிநபராக மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் செய்த விஷயங்கள் ஏராளம். அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பும் சரி, பின்பும் சரி நடிகர் சங்கம் என்னை நிலையில் இருந்தது, இருக்கிறது என்பது திரையுலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு.. அஜித் போன் பண்ணியே பேசல!.. அதெல்லாம் சுத்த பொய்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!..

உடல்நிலை சரியில்லாத காரணத்தில் கடந்த 8 வருடங்களுக்கும் மேல் அரசியல், சினிமா என இரண்டிலுமே அவர் ஆக்டிவாக இல்லை. அவர் சரியாக பேசுவதை கேட்டு கூட பல வருடங்கள் ஆகிறது. சினிமாவில் கணீர் குரலில் அவர் வசனம் பேசும் ஸ்டைலை ரசித்த மக்கள் பேசமுடியாமல் இருக்கும் அவரை பார்க்க முடியாமல் மனம் வருந்தினார்கள்.

ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ரமணா. இந்த படத்தின் கதையை சொல்ல முருகதாஸ் விஜயகாந்தின் வீட்டுக்கு போனபோது ‘ஹீரோ குடிப்பது போலவோ, புகை பிடிப்பது போலவோ காட்சிகள் இருக்க கூடாது. பசங்களுக்கு அப்பாவாக நடிக்கமாட்டார்.. படத்தின் கிளைமேக்ஸில் அவர் இறக்க கூடாது’ என பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார்கள்.

vijayakanth

ஆனாலும், படத்தின் இறுதியில் ஹீரோ இறப்பது போலவே முருகதாஸ் கதையை சொல்லியிருக்கிறார். அருகில் இருந்த பிரேமலதா ‘ஹீரோ கண்டிப்பாக சாக வேண்டுமா?’ என கேட்டிருக்கிறார். அப்போது ‘இந்த கதைக்கு அதுதான் சரி’ என தெளிவாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

‘என்னுடைய மரணமும் தப்பு செய்பவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கணும்’ என ரமணா படத்தின் இறுதியில் வசனம் பேசியிருப்பார் விஜயகாந்த். ஆனால், நிஜ வாழ்வில் அவரின் மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..

Next Story