ரஜினி, கமலை வச்சி பக்கா ஸ்கெட்ச் போட்ட விக்ரம்!.. சியானோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!...
சினிமாவில் நடிகர்களுக்கு உத்வேகமாக எப்போதும் சீனியர் நடிகர்கள் இருப்பார்கள். சிவாஜிக்கு பின் நடிக்க வந்த பலருக்கும் அவரே உத்வேகமாக இருந்தார். ஏனெனில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்துவிட்டு போனாவர் அவர். அதேபோல், ஆக்ஷன் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர்கள் எம்.ஜி.ஆர் ரூட்டில் பயணித்தார்கள்.
நடிகர் ரஜினி கூட பின்பற்றியது எம்.ஜி.ஆரின் ரூட்டைத்தான். கமர்ஷியல் ரூட்டில் பயணித்து சூப்பர்ஸ்டாராகவும் அவர் மாறினார். விஜயகாந்தும் அதே ரூட்டில்தான் சென்றார். ஏனெனில், தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் ஆகவேண்டுமெனில் ஒரு நடிகர் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் இப்போதுவரை மாறாத விதியாக இருக்கிறது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தால் கொண்டாட்டம்.. 14 வருஷம் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் விஜய்!
சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா போன்ற எல்லா நடிகர்களுமே இந்த ரூட்டில் பயணிப்பதற்கு காரணம் இதுதான். வெறும் கலைப்படங்களில் நடித்தால் காணாமல் போய்விடுவோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதில் நடிகர் விக்ரம் முக்கியமானவர்.
சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு, பல வருடங்கள் போராடி சேது படம் மூலம் கவனிக்க வைத்து, தில், துள், சாமி என அடித்து ஆடிய ரசிகர்களிடம் பிரபலமாகி ஸ்டாராக மாறியவர் இவர். ஒருபக்கம் மசாலா படங்களில் நடிக்கும் விக்ரம் மறுபக்கம் காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் படத்தின் வில்லன்… கேமியோ ரோலில் முன்னணி நாயகி… அப்டேட்களால் திணறடித்த படக்குழு!…
நடிப்புக்காக அவர் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார் என்பதை ‘ஐ’ படத்தில் அவரின் ஒல்லியான தோற்றத்தை பார்த்தால் தெரியும். தன்னுடைய சக்சஸ் சீக்ரெட் பற்றி ஒருமுறை சொன்ன விக்ரம் ‘எனக்கு ரஜினி, கமல் இருவரையும் பிடிக்கும். ஆனால், அவர்களில் ஒருவரை பின்பற்ற எனக்கு விருப்பமில்லை.
ஆனால், அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு ரூட் இருக்கிறது. ரஜினியிடமிருந்து மாஸ், கமலிடமிருந்து கிளாஸ் என இரண்டையும் எடுத்துக்கொண்டு அந்த ரூட்டில் பயணித்தேன். அதுவே என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது’ என சொல்லி இருக்கிறார்.