சிம்பு, தனுஷுக்கே 8 கோடிதான்.. ஆனா சிவகார்த்திகேயன் கேட்ட பெரிய சம்பளம்… விளாசும் பிரபலம்
Dhanush Simbu: கம்மி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் சிவகார்த்திகேயனைப் பார்த்து தற்போது மிகப்பெரிய அளவில் சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றி இருப்பதாக பிரபல தியேட்டர் நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா வளர்ச்சி இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் லாக் டவுனிற்கு பின்னர் ஏற்பட்ட ஓடிடி வளர்ச்சிதான். அதன்பின்னரே படத்துக்கு நல்ல வசூல் வேட்டை நடக்கிறது. ஆனால் இதையும் நிம்மதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!
இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான சிம்பு, தனுஷ் 8 மற்றும் 10 கோடி அளவில் சம்பளம் வாங்கி வந்தனர். அந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 30 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார்.
ஆனால் இவர்கள் திடீரென தங்கள் சம்பளத்தை 30 முதல் 50 கோடி வரை அதிகரித்துள்ளனர். 75 கோடிக்கு சம்பளம் வாங்கியவர்கள் தற்போது 200 கோடி வரை சம்பளத்தை அதிகம் செய்திருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அதான் உங்களுக்கு ஓடிடி வருமானம் வருகிறதே என்கின்றனர்.
இதையும் படிங்க: பொய் சொல்லலாம்.. ஆனா இப்படியா… குக் வித் கோமாளி பிரபலத்தினை கடுப்படித்த சிலம்பரசன்
தயாரிப்பாளர்கள் வரும் வருமானத்தினை நடிகர்களுக்கே கொடுத்துவிட்டால் அவர்கள் என்ன செய்ய முடியும். சமீப காலமாக தான் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஒரு படம் பலமொழிகளில் ஓடிடியில் வெளியிடப்படுகிறது.
அதனால் வருமானமும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பளத்திற்காக தற்போது தமிழ் நடிகர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் கோலிவுட்டில் ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து நிலவி வருகிறது. விரைவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.