டூப்பெல்லாம் எதுக்கு.. நான் தான் நடிப்பேன்.. ரிஸ்க் எடுத்த முக்கிய நடிகர்கள்...
தமிழ் சினிமாவில் டூப் போட்டு காட்சிகளை எடுப்பது சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான ரிஸ்க் காட்சிகளை சண்டை நிபுணர்களை வைத்து எடுப்பர். ஆனால், நடிகர்கள் சிலர் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க பெரிய ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். பல வருடமாக சினிமாவில் இருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஆரம்ப காலத்தில் ரஜினி தனது படங்களின் சண்டை காட்சிகளுக்கு டூப் போடாமல் நடித்திருக்கிறார். அதுலும், முரட்டுக்காளை படத்தில் வரும் ரயில் சண்டை காட்சிகளை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதற்கு டூப் போட மறுத்த ரஜினி சில ரிஸ்க் காட்சிகளை கூட அவரே செய்தாராம்.
கமல்ஹாசன்:
தமிழில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகள் எல்லாமே டூப் தான். ஆனால் முதன்முறையாக விருமாண்டி படத்தில் தான் அது நிஜமாக காட்சியாக்கப்பட்டது. ஒரே சீனுக்காக வெள்ளையங்கிரியில் இருந்து நிஜ ஜல்லிக்கட்டு காளையை கொண்டு வந்து அவரே டூப் போடாமலும் நடித்தாராம். இதுமட்டுமல்லாமல் கமல் பல படங்களில் டூப் போடாமல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா:
நடிப்பிற்காக பல ரிஸ்குகளை எடுக்க தயங்காதவர் நடிகர் சூர்யா. இவரும் தன் படங்களில் டூப்பை விரும்புவதில்லை. அப்படி காக்க காக்க படத்தில் வில்லன் இவரை சுடுவார். சூர்யா கதவை உடைத்துக்கொண்டு 4 டிகிரி குளிர் நீரில் விழுவும் காட்சியை அவரே செய்திருப்பார்.
விஜய்:
தமிழ் சினிமாவில் விஜய் எடுக்கும் ரிஸ்க் காட்சிகள் வெளியில் தெரிவதில்லை என்பதே உண்மை. வேலாயுதம் படத்தில் 150 அடி உயர பாலத்தில் ஒரு சண்டை காட்சி அமைந்து இருக்கும். அதில் விஜய் டூப் போடாமல் நடித்திருப்பார். ஆனால், அதில் அவர் சூட் போட்டு நடித்திருந்ததால் அது அவர் தானா என பலரால் கண்டறிய முடியாமல் போனது.
இதையும் படிங்க: ரசிகர்களை கண்ணீர் விட வைத்த டாப் 5 படங்கள்… நீங்க மிஸ் பண்ணாம பாருங்க…
அஜித்:
ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுவது போல செய்பவர் நடிகர் அஜித். எப்போதுமே தனது படங்களில் டூப் போடாமல் செய்வதையே விரும்புவார். வீரம் படத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தொங்கி கொண்டே நடித்தது அஜித் தானாம். அதுமட்டுமல்லாமல், பில்லா2 படத்தில் பிளைனில் தொங்கி கொண்டு நடித்திருப்பார் அஜித். இது எந்த தமிழ் சினிமா நடிகர்களும் இதுவரை பண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.