மூன்று கெட்டப்புகளில் நடித்தும் மூட் அவுட் பண்ணாத 5 நடிகர்கள்!… மூன்று முகத்தில் கலக்கிய ரஜினி!..

Published on: April 25, 2024
rajini
---Advertisement---

சினிமாவை பொறுத்தவரை சில படங்களில் ஒரு நடிகர் ஒரு வேடத்தில் நடிப்பதையே சகிக்க முடியாது. மொக்கையான கதையாக இருந்தால் படம் தேராது. அதேநேரம் பல நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதேபோல் 3 வேடங்களிலும் சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். கமல் கூட தசாவாதரம் படத்தில் 9 கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதேநேரம், 3 கெட்டப்புகளில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்த 5 நடிகர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

தெய்வமகன் படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என நடிகர் திலகம் சிவாஜி காட்டிய அற்புதமான நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. கைவிடப்பட்ட மகனாக அப்பா சிவாஜி முன்பு நின்று மகன் சிவாஜி பேசும் வசனங்களும், காட்சியும் பல இயக்குனர்களுக்கும் பிடித்த ஒரு காட்சி ஆகும்.

இதையும் படிங்க: நிஜ முத்துப்பாண்டியாவே மாறிய பிரகாஷ்ராஜ்! ‘கில்லி’ படத்தில் இயக்குனரை மிரட்டிய சம்பவம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று முகம் படத்தில் தந்தை, அவருக்கு பிறக்கும் 2 மகன்கள் என மூன்று வேடங்களில் கலக்கி இருந்தார். அலெக்ஸ் பாண்டியனாக வரும் அப்பா ரஜினி வித்தியாசமான உடல்மொழி மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் வந்து போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி ஏற்ற அலெக்ஸ் பாண்டியன் வேடம் முக்கியமானது.

ரஜினியின் போட்டி நடிகராக பார்க்கப்படும் கமல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என 3 வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒரு வேடத்தில் குள்ள அப்புவாக கலக்கி இருப்பார். எப்படி அவர் தன்னை குட்டையாக காட்டி கொண்டார் என்பது இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை.

இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் வரலாறு. இதில், பரதநாட்டிய கலைஞராகவும், அவருக்கு பிறக்கும் 2 மகன்களாகவும் 3 வேடங்களில் அஜித் கலக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் அப்பா, இரண்டு மகன்கள் என 3 வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம்தான் மெர்சல். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், சியான் விக்ரமும் அந்நியன் படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்தார். ஆனால், அப்பா – மகனாக இல்லாமல் மல்டிப்பிள் பர்சனாலிட்டியாக வெவ்வேறு தோற்றங்களில் வந்து கலக்கினார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.