பளார்னு ஒரு அறைவிட்டார்!.. அதிலிருந்தே நான் ‘தல’க்கு தங்கச்சியா மாறிட்டேன்!.. நடிகை சொல்றதை கேளுங்க!..
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அவரை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அவருடைய உண்மையாக குணம், கேரக்டர் என அவருடன் நெருங்கி பழகியவர்களுக்குத்தான் தெரியும். அந்த வகையில் நடிகை ஆர்த்தி அஜித்தை பற்றி பல சுவாரஸ்ய சம்பவங்களை கூறியிருக்கிறார்.
அஜித் நடித்த ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக ஆர்த்தி ஸ்பாட்டுக்கு போய்விட்டாராம். வெளியே கேரவனில் ஆர்த்தியின் அம்மா தனியா இருக்க கேரவனில் இருக்கும் ஏசி குளிர் காரணமாக அவரது அம்மா வெளியே வந்து யாராவது இருக்காங்களா? ஏசியை குறைக்க சொல்ல என வந்து பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அஜித் அவரை தாண்டி வர,
இதையும் படிங்க: தமன்னாவால் கெட்டுப்போன இசை நிகழ்ச்சி… ரசிகர்களுக்கு இப்படி ஒரு கொடுமையா…?
ஆர்த்தியின் அம்மாவை பார்த்ததும் நிலைமையை கேட்டு சரி செய்துவிட்டு குடிக்க வெண்ணீரும் குடிக்க கொடுத்து ஸ்பாட்டுக்கு வந்தாராம் அஜித். உள்ளே நேராக ஆர்த்தியிடம் வந்து ‘உன் அம்மாவையும் அழைச்சுட்டு வந்தீங்களா ஆர்த்தி? ஒன்னு உதவியாளரை அவங்க கூட வச்சுட்டு வரனும். இல்ல அடிக்கடி போன் போட்டு எதாவது வேணுமானு கேட்கனும். இல்ல நீங்களாவது போய் பார்க்கனும். அதுவும் இல்லனா அவங்கள கூட்டிட்டு வந்திருக்க கூடாது’ என சொல்லி இனிமே தனியா விடாதீங்க என கூறினாராம்.
அதே போல் இன்னொரு படப்பிடிப்பு சமயத்தில் ரசிகர் ஒருவர் அவர் தலையில் தல என முடியை கட் செய்து அஜித்தை பார்த்து அவரது தலையை காட்டியிருக்கிறார். அவரை பார்த்ததும் போலீஸ் உதவியுடன் அந்த ரசிகரை தன் அருகே வரவழைத்து பளார் என ஒரு அறைவிட்டாராம் அஜித். கூடவே தன் உதவியாளரையும் அந்த ரசிகருடன் போக சொல்லி மொட்டை அடிக்க வைத்தாராம்.
இதையும் படிங்க:கமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு நேரில் போய் வாய்ப்பு கேட்ட ரஜினி!… ஒரு சுவாரஸ்ய பின்னணி!…
அதன் பின் மொட்டைத் தலையுடன் அந்த ரசிகருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் அஜித். அதோடு இதை உன் பெற்றோர்கள் பார்த்தால் சந்தோஷப்படுவார்களா? உங்களுடைய அன்பும் இதயத்தில் இருந்தால் போதும் என சொல்லி அறிவுரை கொடுத்து அந்த ரசிகரை அனுப்பி வைத்தாராம். அதுமட்டுமில்லாமல் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஆர்த்தி அஜித்தை பற்றி கூறும் போது ‘தல என்றால் தன்னம்பிக்கையும் லட்சியமும் சேர்ந்ததுதான். அப்படிப்பட்ட ரசிகர்களை உள்ளடக்கியவர்தான் அஜித்’ என தல என்பதற்கு ஒரு அற்புதமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
இது எப்படியோ அஜித் காதுக்கு செல்ல ஒரு பொது நிகழ்ச்சியில் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த ஆர்த்தியை பார்த்ததும் கீழிறங்கி வந்து ‘ஆர்த்தி. ரொம்ப நன்றி. என்ன தல தலனு கூப்பிடறது பிடிக்கவே இல்லை. அந்த தல-க்கு பிரம்மாதமான விளக்கத்தை கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி’ என சொன்னாராம். அதிலிருந்தே ஆர்த்தி தலக்கு தங்கச்சியாக மாறிவிட்டாராம்.
இதையும் படிங்க: அப்படியே நகராம நில்லு நல்லா பாத்துக்குறோம்!. ஸ்லீவ்லெஸ் உடையில் மனசை கெடுக்கும் ஆண்ட்ரியா…