ஐய்யயோ அந்த நடிகரா? வேணாம்.. பல பேர் சொல்லி தடுத்தும் துணிந்து நடித்த sms பட நாயகி

Published on: January 29, 2024
anuya
---Advertisement---

Actor Anuya: ஒரு சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்திருப்பார்கள். அந்த நடிகைகளின் தாக்கம் பல நாள்கள் இருந்து கொண்டே இருக்கும். அப்படி வந்த நடிகைதான் அனுயா. தமிழில் சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அனுயா. அந்த ஒரு படம் அவரை இன்றளவும் நியாபகம் வைக்க உதவுகிறது.

அனுயா மட்டும் இல்ல. அந்த படத்தையும் படத்தில் நடித்த நடிகர்கள், படத்தில் இருக்கும் காமெடி என எதையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்தளவுக்கு ரசிகர்களிடம் ஒரு அமோக வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது சிவா மனசுல சக்தி.

இதையும் படிங்க: ரோபோ சங்கரை வண்டியில் வச்சு தள்ளிட்டு போகும் மனைவி! ஐய்யோ என்னாச்சு? வைரலாகும் வீடியோ

அதிலும் குறிப்பாக ஜீவா மற்றும் சந்தானம் காம்போ வேற லெவல். அதிலும் அங்கிள் அங்கிள் என இருவரும் செய்யும் அட்டகாசம் படம் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பலையை ஏற்படுத்தும். இத்தனை பெருமைமிக்க படத்தில் நடித்த அனுயாவையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?

இந்தப் படத்திற்கு பிறகு பெரியதாக வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அவரையும் ஒரு டாப் ஹீரோயின் ரேஞ்சுக்குத்தான் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். இப்போது வரும் வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக எந்த கேரக்டர் ஆனாலும் ஓகே சொல்லியிருக்கிறாராம் அனுயா.

இதையும் படிங்க: எண்ட்ரிக்கு முன்னாடி இதை செய்ய திட்டமிடும் விஜய்!… அவர் கேரியரில் இதான் முதல்முறையாம்…

நடிப்புதானே. அதனால் எந்த கேரக்டர் ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவில் இருக்கிறார். சுந்தர் சியுடன் நகரம் என்ற படத்தில் நடித்தார் அனுயா. ஆனால் முதலில் இவர் அந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தெரிந்த அனுயாவின் நெருங்கிய வட்டாரங்கள் ‘ஐயோ சுந்தர் சி படமா? வேண்டாம். அதில் நடித்தால் உன் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும்’ என்றெல்லாம் கூறி பயமுறுத்தினார்களாம்.

ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு என் இமேஜ் டேமேஜான மாதிரி எனக்கு தெரியவில்லை. எனக்கு ரிஸ்க் எடுக்கிறது என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் விளக்கமளித்தார்.மேலும் பிக்பாஸிலும் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் அனுயா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லீகலா 2 கல்யாணம்!. இல்லீகலா எத்தனை வேணா பண்ணுவேன்!.. 3வது கல்யாணம் பற்றி பேசும் வனிதா…