Cinema History
கண்ணாதாசனின் பாடலை வைத்தே அவரை கலாய்த்த தேவிகா!.. வெளிவராத தகவல்!…
Kannadasan: தமிழ் சினிமாவில் பெரிய பெரிய தத்துவங்களையும், இலக்கியங்களையும் கூட எளிமையான வார்த்தைகள் மூலம் சாமானியனுக்கும் புரிவது போல் பாடல் வரிகளில் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பல காதல், தத்துவ, சோக பாடல்களை எழுதியிருக்கிறார். இப்போதும் கூட எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு மரணம் நேர்ந்தால் இறுதி ஊர்வலத்தில் ‘வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசி வரை யாரோ’ என அவரின் பாடல்தான் ஒலிக்கிறது. இதுதான் கண்ணதாசனின் வெற்றி.
திரையுலகில் 3 நடிகைகள் மட்டுமே கண்ணதாசன் உயர்வாக எழுதியிருக்கிறார். டி.ஆர்.ராஜகுமாரி, மனோரமா மற்றும் தேவிகா. தேவிகாவும் கண்ணதாசனும் உடன் பிறவா சகோதர – சகோதரியாகவே இருந்தனர். ஒருமுறை தேவிகாவை பற்றி தவறாக ஒரு இயக்குனர் பேச அங்கேயே அவரை கடுமையாக திட்டினார் கண்ணதாசன். அந்த அளவுக்கு தேவிகாவின் மீது அன்பு கொண்டிருந்தார். சுருக்கமாக சொன்னால் தேவிகாவுக்கு காட் ஃபதராகவே கண்ணதாசன் இருந்தார்.
இதையும் படிங்க: தியேட்டரில் எம்.ஜி.ஆரை கண்டுகொள்ளாத ரசிகர்கள்!.. காலம் மாறி பின்னால் நடந்துதான் மேஜிக்!..
அதேபோல்தான் தேவிகாவும். கண்ணதாசன் மீது அபரிதமான அன்பையும், மரியாதையும் வைத்திருந்தார். கண்ணதாசன் தயாரிப்பில் ஒரு படம் உருவானால் அதில் தேவிகாவே கதாநாயகியாக இருப்பார். அவரின் கால்ஷீட் இல்லை என்றால் மட்டுமே வேறு நடிகை நடிப்பார். ஏன் தொடர்ந்து உங்கள் படங்களில் தேவிகாவையே கதாநாயகியாக போடுகிறீர்கள் என ஒருமுறை கேட்ட போது கண்ணதாசன் சொன்ன பதில் இதுதான்.
எந்த குடை என்னை வெயிலில் இருந்தும் மழையிலிருந்தும் காப்பாற்றுகிறதோ அதைத்தானே நான் பிடிக்க முடியும். என் படத்தில் என்ன சம்பளம் என தேவிகா கேட்க மாட்டார்… படப்பிடிப்புக்கு தாமதமாக வர மாட்டார். மேலும், ஒன்று அல்லது இரண்டாவது டேக்கில் நடித்து கொடுத்துவிடுவார். அப்படி இருக்கும்போது நான் ஏன் இன்னொரு நடிகையிடம் போக வேண்டும் என கேட்டார்.
இதையும் படிங்க: நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..
அதை விட முக்கியமாக தேவிகா என்னை பார்த்து ‘என்ன.. அண்ணன் முகம் இப்படி வாடியிருக்கு’ என ஒரு வார்த்தை கேட்டால் என் சோகத்தில் பாதி மறைந்துவிடும். என் மீது அன்பும், கரிசனம் கொண்ட தங்கை’ என சொன்னவர் கண்ணதாசன்.
ஆனந்த ஜோதி என்கிற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக தேவிகா நடித்திருப்பார். இந்த படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’. இந்த பாடலை பாடித்தான் கண்ணாதாசனை அடிக்கடி தேவிகா கிண்டல் அடிப்பாராம்.
இதையும் படிங்க: இருபது நிமிட சீனை மூன்றே நிமிட பாடலில் சொன்ன கண்ணதாசன்.. படக்குழுவையே வியப்பில் ஆழ்த்திய கவியரசர்..