Connect with us
jaya

Cinema History

8 வயதிலேயே நடன இயக்குனராக பணிபுரிந்த ஜெயலலிதா! யாரும் அறிந்திராத ஜெ.வின் இன்னொரு பக்கம்

Actress Jayalalitha: தமிழகத்தின் ஒரு பெரிய பெண் ஆளுமையாக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. அரசியலுக்கு முன்பாகவே சினிமாவிலும் கொடிகட்டி பறந்த ஒரு உச்சம் தொட்ட நடிகையாகவே வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

ஆங்கிலத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார் ஜெயலலிதா. அந்த படத்தின் பெயர் எபிசில். முதன் முதலில் கன்னடம் திரைப்படத்தின் மூலம் தான் ஜெயலலிதா சினிமா துறைக்குள் நுழைந்து இருக்கிறார். அந்தப் படம் ஸ்ரீ சைல மகாத்மியம்.

இதையும் படிங்க: குணா குகைக்குள் செல்ல மறுத்த இயக்குனர்!… கமல் செய்தது இதுதான்!.. ஒரு பிளாஷ்பேக்!…

இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் ஜெயலலிதா. ஆனால் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் வேறொரு குழந்தை தான் நடித்திருந்ததாம். திடீரென அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே இவர் தாயாருடன் வந்திருந்ததை பார்த்த இந்த படத்தின் இயக்குனர் ‘நீ நடிக்கிறாயா?’ என கேட்டிருக்கிறார்.

ஜெயலலிதா தாயான சந்தியாவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் சம்மதிக்கவே இந்த கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாராம் ஜெயலலிதா. இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பரதநாட்டியம் ஆட வேண்டுமாம். ஏற்கனவே ஜெயலலிதா நன்கு நடனம் ஆடக்கூடியவர்.

இதையும் படிங்க: இவங்களுக்கா பிரச்னை? குழப்பத்தில் இருந்த ரஜினிகாந்த்… எம்.ஜி.ஆர் கொடுத்த அட்வைஸ்!..

படப்பிடிப்பு தொடங்கியதும் எங்கு இருந்தோ ஹார்மோனியம் சத்தம் கேட்டு உடனே ஜெயலலிதா ஆடத் தொடங்கினாராம். இவருக்கு நடனம் ஆடத் தெரிந்ததால் அவர் இஷ்டத்துக்கு ஆட விட்டுவிட்டார்களாம் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும்.

அதனால் முதலில் இவர் ஆடிய நடனத்தை படமாக்கிவிட்டு அதன் பிறகு தான் அந்த நடனத்திற்கு ஏற்ப பாட்டை சேர்த்தார்களாம். அதனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் ஜெயலலிதா குழந்தை நட்சத்திரம் மட்டும் அல்லாமல் ஒரு நடன இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித்தின் அறிமுக படத்தில் ஜோடி அந்த கவர்ச்சி கன்னியா?!. நல்லவேளை மனுஷன் தப்பிச்சாரு!..

இதைப் பற்றி ஒரு கட்டுரையில் ஜெயலலிதா நான் அந்த படத்தில் நடன இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறாராம். இதன் மூலம் எட்டு வயதில் நடன இயக்குனராக பணிபுரிந்த முதல் நடிகை என்றால் அது ஜெயலலிதா தான் என பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top