Connect with us

Cinema History

இவருக்கு ஜோடியா?!.. விஜயகாந்துடன் நடிக்க மறுத்த சிரிப்பு நடிகை.. அட அந்த படமா?!…

Vijayakanth: தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனி நபராக போராடி, வாய்ப்புகள் கேட்டு அலைந்து ஹீரோவாக மாறியவர். 80களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உச்சம் தொட்டவர்.

இவருடன் நடிக்க ரஜினியே மறுத்த போது ஒரு கட்டத்தில் அவருக்கு போட்டியாக விஜயகாந்த் வந்ததுதான் அவர் சினிமாவில் சாதித்த வரலாறு. சில சமயங்கள் ரஜினி படத்தோடு வெளிவந்த விஜயகாந்த் ரஜினியை விட அதிக வசூலை பெற்ற கதையும் நடந்தது. கிராமபுறங்களில் ரஜினியை விட விஜயகாந்துக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள்.

இதையும் படிங்க: அட அது ஒரு ஹாலிவுட் படமா?!.. ரஜினிக்கே விபூதி அடித்த பிரபல இயக்குனர்…

அதேநேரம், விஜயகாந்த் வளர்ந்து வந்த காலத்தில் அவருடன் அப்போது முன்னணியில் இருந்த பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்தார்கள். அவரின் நிறத்தையும், அழகையும் காரணம் காட்டி அவருடன நடிக்க பல நடிகைகளும் தயங்கினார்கள். எனவே, மார்க்கெட் இல்லாத, அறிமுக நடிகைகளுடன் மட்டுமே விஜயகாந்த் நடித்து வந்தார்.

விஜயகாந்துடன் பல படங்களில் நடித்த ராதிகா கூட ஆரம்பத்தில் அவருடன் நடிக்க மறுத்தவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் நடிக்க துவங்கி பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். விஜயகாந்த் வளரும் நிலையில் அவருடன் நடிக்க மறுத்தார்கள் என்றால் விஜயகாந்த் வளர்ந்து பெரிய நடிகரான பின்னரும் அவருடன் நடிக்க மறுத்த ஒரு நடிகை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: அந்த கேங்ஸ்டர் படத்தின் தொடர்ச்சிதான் தலைவர் 171?.. பக்காவா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்!..

விஜயகாந்த் நடிப்பில் 1999ம் வருடம் வெளியான திரைப்படம் கள்ளழகர். அப்போது தமிழ் சினிமாவில் நடிகை லைலா பிரபலமாகி வந்த நேரம். கள்ளழகர் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். ஆனால்,விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து ‘இவர் கூடவா நான் நடிக்கணும்’ என யோசித்தாராம்.

ஆனால், இவரும் பெரிய ஹீரோதான். இவருடன் ஜோடி போட்டு நடித்தால் நீங்கள் கிராமபுறங்களில் கூட பிரபலமாகிவிடுவீர்கள் என சொன்னதும் நடிக்க ஒப்புகொண்டாராம் சிரிப்பழகி லைலா.

இதையும் படிங்க: 1000 கோடி சொத்துக்கு அதிபதி! சிம்புவின் வளர்ச்சிக்கு குறுக்கே நிக்கும் அந்த கருப்பு ஆடு யார் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top