அப்போ ‘கோட்’ படத்திலும் அந்த சீன் இருக்கும்! முத்தக்காட்சி பற்றி நடிகை வெளியிட்ட பதிவு

Published on: January 30, 2024
meena
---Advertisement---

Actress Meenakshi Chaudary: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்திலும் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக லீடு ரோலில் நடித்து வருகிறார். கோட் படத்திற்கு பிறகு மீனாட்சி சௌத்ரி தமிழ் சினிமாவில் ஒரு தேடப்படும் நடிகையாக மாற வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு பிரச்னையே அதிகம்… இதுல ஈஸ்வரி ஒன்னை இழுத்து வச்சிட்டாங்களே… சங்கமம் வேற சைட்ல!

இந்த நிலையில் மீனாட்சி சௌத்ரி முத்தக்காட்சி பற்றி கூறிய ஒரு விஷயம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்தக்காட்சியில் நடிக்க தயார் என சொல்லியிருக்கிறாராம் மீனாட்சி சௌத்ரி.

அவரின் இந்த பதிவால் ரசிகர்கள் கோட் படத்தில் அப்போ விஜய் மாஸ் செய்ய இருக்கிறார் என கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே லியோ படத்தில் த்ரிஷாவுடனான கிஸ் சீனில் நடித்து பெரும் விமர்சனத்திற்கு ஆளானார் விஜய்.

இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

இப்பொழுது மீண்டும் மீனாட்சியின் இந்த பதிவால் கோட் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மீனாட்சி இந்தப் பதிவை போட்டதும் அதை பார்த்து விட்டு ரசிகர்கள் மீனாட்சியை கண்டபடி வசைபாடி வருகிறார்கள். கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமென்றாலும் நடிக்க தயாரா என்று கேட்டு வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.