சீத்தான்னு நினைச்சா இதுவேற லெவல்!.. விண்டேஜ் லுக்கில் மனசை கெடுக்கும் மிருனள் தாக்கூர்!..
மும்பையை சொந்த ஊராக கொண்டவர் மிருனள் தாக்கூர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். தாய் மொழி ஹிந்தி என்பதால் அதிகம் நடித்தது ஹிந்தி படங்களில்தான். ஆனால், துவக்கத்தில் சில மராத்தி மொழி படங்களில் நடித்தார்.
அதன்பின் பாலிவுட்டில் நுழைந்து தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். 2022ம் வருடம் முதல் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். அதிலும் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த ‘சீதா ராமம்’ படத்தில் சீத்தாவாக வந்து ரசிகர்களின் மனதில் குடியேறினார். இதன்பின் இவர் எத்தனை படங்களில் நடித்தாலும் இது போல அழுத்தமான வேடம் கிடைக்காது.
அந்த படத்திற்கு பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். விஜய தேவரகொண்டாவுடன் மிருனள் நடித்த தி ஃபேமிலி ஸ்டார் என்கிற படம் கடந்த 5ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. மிருனளுடன் ஜோடி போட்டு நடிக்க தமிழ் சினிமா நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்திலும் மிருனள் பெயர் அடிபட்டது. ஆனால், இன்னமும் அந்த செய்தி உறுதியாகவில்லை. சினிமாவில் நடிப்பதற்கு முன் டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஒருபக்கம், தன்னுடைய மார்க்கெட் தக்க வைத்து கொள்வதற்காக கிளுகிளுப்பு உடைகளை போட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மிருனள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட அவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் கட்டழகை கச்சிதமாக காட்டி விண்டேஜ் லுக்கில் மிருனள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது.