Actor Rajini: ரஜினியின் நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்கள் வந்திருந்தாலும் அவர் கெரியரில் காலங்காலமாக பேர் சொல்லும் படமாக ஒரு சில படங்கள்தான் எப்போதுமே இருக்கும். அந்த வகையில் ரஜினியின் ஹிட் லிஸ்ட்டில் எப்போதும் இருக்கும் திரைப்படம் என்றால் அது படையப்பா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் படையப்பா. சிவாஜிக்கு இது கடைசி படமாக அமைந்தது. படத்தில் பல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் நிலையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அதிக வசூலை அள்ளிய படமாகவும் படையப்பா அமைந்தது.
இதையும் படிங்க: அருண் விஜயின் படத்தை பார்த்து மெய்சிலிர்த்து போன தெலுங்கு தேசம்.. இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்
ஒரு பக்கம் ரஜினியின் கேரக்டர் மாஸ் காட்டினாலும் ரஜினிக்கு நிகராக தன் பக்கம் ரசிகர்களை திரும்ப வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். சுட்டெரிக்கும் பார்வையில் ஆணவம் மிகுந்த கதாபாத்திரத்தில் நீலாம்பரியாக நடித்து எப்போதும் ரசிகர்கள் நெஞ்சங்களில் குடி போனார் ரம்யா கிருஷ்ணன்.
இந்த நிலையில் சௌந்தர்யா நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகையே வேற என்ற செய்தி வைரலாகி வருகின்றது. முதலில் சௌந்தர்யாவுக்கு பதில் நக்மாதான் நடித்தாராம். அது சம்பந்தமான புகைப்படங்களும் வைரலானது.
இதையும் படிங்க: கல்யாணம் செஞ்சிக்க போறாங்களா பாக்கியா.. ஈஸ்வரி ஓகே சொல்லணுமே.. கோபி எப்ப மாட்டுவாரு…
ஆனால் திடீரென நக்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. படப்பிடிப்பிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். அதன் பிறகு அவசர அவசரமாக சௌந்தர்யாவை பிடித்து நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் சௌந்தர்யா நடித்ததனால்தான் ரஜினிக்கு சரியான ஜோடியாக பார்க்கப்பட்டார். ஹோம்லியான லுக்கில் பார்க்க அற்புதமாக இருந்தார் சௌந்தர்யா.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…