Cinema News
100 கோடிகளில் வீடு… சொத்துமதிப்பு மட்டும் இவ்ளோவா?.. லேடி சூப்பர்ஸ்டாராக சாதித்த நயன்தாரா…
Nayanthara: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீபத்திய காலத்தில் மார்க்கெட் இழந்து இருந்தாலும் அவரின் வருமானத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் தான் இருக்கிறதாம். அதுகுறித்தும் அவர் சொத்து மதிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
கோலிவுட்டில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் நயன்தாரா. முதல் படமே பெரிய அளவில் வெற்றி கொடுக்க தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் சிம்புவுடன் ஆன காதலினால் சில காலம் ப்ரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார்.
இதையும் படிங்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..
இந்த காலத்தில் தனி நாயகியாக நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். நயன்தாரா ஒரு படத்துக்கு 10 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், டனிஷ்க், கே பியூட்டி, மாசா உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கு 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது. மொத்த சொத்து மதிப்பு மட்டும் 200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் மொத்தமாக நான்கு ஆடம்பர பங்களாவை நயன் சொந்தமாக்கி வைத்து இருக்கிறாராம். தற்போது அவர் தன் கணவர் மற்றும் மகன்களுடன் தங்கி இருக்கும் நான்கு அறை கொண்ட விசாலமான பங்களா மதிப்பு மட்டுமே 100 கோடி எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உங்களுக்கு மொத்தம் எத்தனை புருஷன்கள்?!.. கோபப்படாமல் கூலாக பதில் சொன்ன அம்பிகா…
பாலிவுட் நடிகைகளை போல சொந்தமாக ஒரு ஜெட் விமானத்தினையும் வைத்திருக்காராம். இதன் மதிப்பு மட்டுமே 50 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. 74 லட்ச ரூபாய் மதிப்புடைய பிஎம்டபுள்யூ கார், 88 லட்ச ரூபாய் மதிப்புடைய மெர்சிடஸ், இன்னோவா கிறிஸ்டா, ஃபார்ட் எண்டிவியார், 1.76 கோடி மதிப்புடைய பிஎம்டபுள்யூ 7 சீரிஸ் கார்களை சொந்தமாக வைத்து இருக்கிறார்.
பிரபல லிப் பாம், துபாய் எண்ணெய் நிறுவனத்தில் ஷேர்கள் ஆகிய பிசினஸ்களில் முதலீடு செய்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான ஸ்கின்கேர் பொருட்கள், ஃபெமி என்ற நேப்கின் நிறுவனத்தினையும் சொந்தமாக தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.