ஒருதலைக் காதலால் வெட்டுக் குத்து வாங்கிய ‘குட் நைட்’ பட நடிகை! அந்த நிலையிலும் அவர் செய்த செயல்

by Rohini |
rac
X

rac

Racheal Rebacca: திடீரென முளைத்த விதை என்று சொல்வார்கள். அதே போல்தான் தமிழ் சினிமாவில் திடீரென தோன்றிய ஒரு அற்புதமான நடிகையாக ரேச்சல் ரெபக்கா பார்க்கப்படுகிறார். பக்கத்து வீட்டுப் போன்ற எதார்த்தமான தோற்றத்துடன் நடிப்பில் கெட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடைசி விவசாயி படத்தில் மாஜிஸ்திரேட்டாக இவரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ரேச்சலுக்கு கிடைத்தது. சமீபத்தில் கூட குட் நைட் படத்தில் மணிகண்டனுக்கு அக்காவாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..

நடிகை என்பதையும் தாண்டி ஒரு ஆயுர்வேத மருத்துவராகவும் இருந்து வருகிறார். இவர் அளித்த ஒரு பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருதலைக் காதலால் முன்பு இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களை அந்த பேட்டியில் விளக்கியிருந்தார்.

இவர் வீட்டில் இருக்கும் போது யாரோ கதவு தட்ட திறந்து பார்த்தால் ஒருவர் நின்று கொண்டிருந்தாராம். ரேச்சல் கையில் வைத்திருந்த போனை பிடிங்கிக் கொண்டு ‘இந்த போன் வேண்டுமென்றால் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து என்னை பார்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

இதையும் படிங்க: சும்மா பூ சுத்திட்டு அலையிறானுங்க! யார் கொடுப்பா 200 கோடி விஜய்க்கு? காலை சுத்திய பாம்பால கடிபட்ட தளபதி

போன் போய் விட்டதே என்ற வருத்ததில் இறந்துவிடலாமா என்று கூட யோசித்தாராம். காரணம் யு.கேவிலிருந்து அவர் மாமா வாங்கிக் கொடுத்த போன் அது. அதன் பிறகு சிறிது நேரத்தில் அவரது அப்பா வர இவர் அழுது கொண்டிருந்தாராம். நடந்ததை கேள்விப்பட்டதும் அவரது அப்பா ‘அவனை வீட்டிற்குள் தள்ளி கதவை அடைத்திருக்கலாமே, அவன் உள்ளேயேதான் இருந்திருப்பான்’ என்று சொல்லி சில தன்னம்பிக்கையான விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு வீட்டில் ரேச்சல் மற்றும் அவரது அம்மா இருவரும் இருக்க மீண்டும் யாரோ கதவை தட்ட வெளியே அவன்தான் நின்று கொண்டிருந்தானாம். கதவை திறந்ததும் உள்ளே புகுந்தவன் கையில் வைத்திருந்த கத்தியால் ரேச்சலின் தலை, கழுத்து, வயிறு என பல இடங்களில் குத்திவிட்டு ஓடிவிட்டானாம்.

இதையும் படிங்க: இது நல்லா இல்ல… அட இது மோசமப்பா… எம்.எஸ்.வியையே கடுப்பாக்கிய எம்.ஜி.ஆர்… அதுக்குனு இப்டியா செய்வீங்க..!

அதன் பிறகு இவரை மருத்துவமனையில் அனுமதிக்க அந்த நேரத்தில் எப்படியாவது நான் வாழ வேண்டும், சாதிக்க வேண்டும், என்னை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம் ரேச்சல். இந்த தன்னம்பிக்கையை கொடுத்தவர் என் அப்பா என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Next Story