'கருப்பன்' என்று சொல்லி விஜயகாந்தை வெறுத்த ராதிகா.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?!..

தமிழ் திரை உலகில் இன்றும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டுள்ள நடிகர் விஜயகாந்த். அவர் மறைந்த்திருந்தபோதிலும் இன்றும் அவரது ஈகையாலும், துணிச்சல் காரணமாகவும் பலராலும் நினைவு கூறப்படுகிறார். நடிகை வடிவுக்கரசி ஒரு முறை படம் தயாரிப்பது குறித்து விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
அப்பொழுது தனது படத்தில் நடிக்க ஹீரோவை பரிந்துரைக்க கேட்டுள்ளார். அப்போது உச்சத்தில் இருந்துவந்த "மைக்" மோகன் உட்பட பலரின் பேரையும் விஜயகாந்த் கூறியுள்ளார். அதற்கு ‘உங்கள் பெயரை ஏன் இதுவரை சொல்லவில்லை?’ என வடிவுக்கரசி கேட்க, ‘நீங்க நடிக்கிறீங்களான்னு உரிமையாக ஏன் கேட்கலே?’ன்னு விஜயகாந்த் சொல்ல இருவருக்கும் சிரிப்பு பொங்கியதாம்.
இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..
"அன்னை ஓர் தெய்வம்" என்ற அந்த படத்தில் நடிக்க ஜீவிதாவை முதலில் அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட, ராதிகாவை தொடர்பு கொண்ட போது அந்த "கறுப்பன்" கூட நடிக்க மாட்டேன் என தவிர்த்ததையும் வடிவுக்கரசி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுருந்தார். இறுதியில் மாதுரியின் ஜோடி நடிப்பில் அப்படம் வெளிவந்தது. ஆனால் அடுத்த ஆண்டே ராதிகா விஜயகாந்துடன் தொடச்சியாக நடித்து இருவருக்கும் காதல், மேலும் திருமணம் வரை சென்ற அவர்களது நட்பு வெளியுலகத்திற்கு தெரியவந்தது.
அவரது மறைவு நீங்காத சோகத்தை ஏற்படுதிய போதிலும் அவரது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நிறைவடையும் நிலையிலுள்ள "படைத்தலைவன்" விஜயகாந்த் மீது கொண்ட அன்பின் காரணமாக ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தள்ளது. கிட்டத்தட்ட 85 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள காட்சிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: திருடு போன 2 லட்ச ரூபாய்!.. அப்போது விஜயகாந்த் கொடுத்த ரியாக்ஷன்தான் ஹைலைட்..!
விஜயகாந்த் இறுதி அஞ்சலியின் போது சாலையோர "பூ" வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த மலர்களை தூவி கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த காட்சிகளை பார்த்து "குலுங்கி". "குலுங்கி" அழுத அவரது வாரிசுகளான சண்முகப்பாண்டியன். விஜய பிரபாகரன் தங்கள் தந்தை மீது மக்கள் கொன்டிருந்த அன்பை தெரிந்து கொண்டனர்.
இப்படி இருக்கையில் ராகவா லாரன்ஸ் தவிர "படைத்தலைவன்" படத்தில் வேறு முன்னனி நடிகர்கள் நடிக்காமல் இருப்பது "திரைத்துறை"யில் இருக்கும் நன்றி கெட்ட உணர்வை வெளிப்படுத்துவதாக விமர்சகர் 'செய்யாறு' பாலு தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்ததோடும், ஆதங்கத்தோடும் குறிப்பிட்டுள்ளார்.