விஜயகாந்தை பார்த்தால் ஒரே ஒரு கேள்வியை கண்டிப்பா கேட்கனும்! நடிகை சங்கீதாவின் நீண்ட நாள் ஆசை

sange
Vijayakanth: கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த். ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர். ஒருவர் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது. அதே போலதான் விஜயகாந்தை ஆரம்பத்தில் ஒரு நடிகராக மட்டுமே மக்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இப்போது ஒருவேளை விஜயகாந்த் மட்டும் நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று சினிமா வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேச வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: லிவிங்ஸ்டனை கண்ணீர் விட வச்ச இளையராஜா…. ஆனால் அந்த பாட்டையே ஹிட்டாக வச்ச பிரபல இசையமைப்பாளர்…
அப்படி ஒரு மாபெரும் நடிகராக அரசியல் தலைவராக வலம் வந்தவர் நம்ம கேப்டன். அவரைப் பற்றி பொதுமக்களிலிருந்து பிரபலங்கள் வரை அவருடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை அவ்வப்போது பேட்டிகளில் கூறிவருவதை நாம் கேட்டிருக்கிறோம்.
அந்த வகையில் பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதாவும் விஜயகாந்தை பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். விஜயகாந்தும் சங்கீதாவும் அலெக்ஸாண்டர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: தொடையழகை காட்டி தொக்கா கவுத்துப்புட்ட தர்ஷா குப்தா!.. கையை தூக்கி சும்மா கிறங்கடிக்கிறாரே!..
அந்தப் படத்தில் நடிக்கும் போது சங்கீதாவை விஜயகாந்த் எப்போதும் கிண்டலடித்துக் கொண்டுதான் இருப்பாராம். கம்பீரமாக ஒரு சிங்கம் போல இருந்த நடிகர் விஜயகாந்த். அவரை இப்போது இந்த நிலைமையில் சந்திப்பதை விரும்பவில்லை என்று சங்கீதா கூறினார்.
அதனால்தான் இதுவரை விஜயகாந்தை சென்று பார்க்கவில்லையாம். ஆனால் அவரை பார்க்கும் போது ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்பேன் என்று கூறினார். சங்கீதாவை விஜயகாந்த் எப்பொழுதும் ‘மஹால் எக்ஸ்பிரஸ்’ என்றுதான் அழைப்பாராம்.
இதையும் படிங்க: ஐய்யயோ அவரு பொண்ண தொடமாட்டாரு! தெரியாம போய் மாட்டிக்கிட்டேன் – டி.ஆர் பண்ண அலும்பல் குறித்து சந்தானம் பேட்டி
அந்த சமயத்தில் அதற்கு என்ன அர்த்தம் என்று சங்கீதாவுக்கு தெரியாதாம். அதன் பிறகு தான் ‘மிகவும் மெதுவாக போகக்கூடியது’ என்று அதற்கு அர்த்தம் என்பதை புரிந்து கொண்டாராம். அதனால் மீண்டும் விஜயகாந்தை பார்க்கும் போது என்னை எப்படி அழைப்பீர்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறினார்.