ஒரே நேரத்தில் தல, தளபதி பட வாய்ப்பு! இப்போ நினைக்கிறேன் - அஜித் பட வாய்ப்பை மிஸ் பண்ண காரணத்தை கூறிய சங்கீதா

by Rohini |
sangeetha
X

sangeetha

Actress Sangeetha: தமிழ் சினிமாவில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை இழுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் நடித்த அத்தனை படங்களிலும் சிறு கவர்ச்சி கூட இல்லாமல் தன் நடிப்பாலும் அழகாலும் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சங்கீதா.

சங்கீதா என்றாலே பூவே உனக்காக சங்கீதா என்றுதான் சொல்வார்கள். அந்தளவுக்கு அந்தப் படத்தில் சங்கீதாவின் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்த சங்கீதா சில தினங்களாக மீடியாக்களில் முகம் காட்டி வருகிறார்.

இதையும் படிங்க: வாடகைக்கு பேரம் பேசிக்கொடுத்த சூப்பர்ஸ்டார்… பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெருமிதம்!

ஒரு வேளை எதாவது புதிய ப்ராஜக்டில் கமிட் ஆகியிருப்பாரோ என்ற கேள்வியையும் மக்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் பூவே உனக்காக படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார் சங்கீதா.

அந்தப் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்ரமன் மட்டும்தான் அவர் நினைவில் இருந்தாராம். மற்றபடி விஜய் படம் என்றெல்லாம் சங்கீதாவிற்கு தோன்றவில்லையாம். ஏனெனில் அந்த நேரத்தில் விக்ரமன் எவ்வளவு பெரிய டைரக்டராக வலம் வந்தார் என்பது அவர் இயக்கிய படங்களின் மூலம் அறியலாம்.

இதையும் படிங்க: சீட் டேமேஜ் ஆனத கூட மன்னிச்சுடுவேன்! அதையும் மீறி ஒன்னு பண்ணாங்க! ரோகினி தியேட்டருக்கு விஜயிடமிருந்து பறந்த கால்

அதே நேரத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தில் நடிக்கவும் சங்கீதாவுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் விக்ரமன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அஜித்தின் அந்த சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்டிருக்கிறார் சங்கீதா.

ஆனால் விஜயை இப்போது பார்க்கும் போது ஒரே பிரமிப்பாக இருக்கிறது என்றும் அவரை திரையில் பார்க்கும் போது அவரை தவிற வேறு யாரையும் பார்ப்பதில்லை.அந்தளவுக்கு விஜயை ரசிக்கிறேன் என்றும் சங்கீதா கூறினார்.

இதையும் படிங்க: ஷாருக்கானுடன் நடிக்க கறார் கண்டிஷன் போட்ட கட்டப்பா!.. நடிகர்லாம் இவர்கிட்ட கத்துக்கோங்கப்பா!…

Next Story