நான் மத்தவங்க மாதிரி இல்ல!.. விஜயகாந்துடன் விரும்பி நடித்த ஒரே நடிகை!.. அட அவரா?!..
Actor Vijaykanth: கோலிவுட்டில் பெரிய சாம்ராஜ்ஜியம் நம் கேப்டன் விஜயகாந்த். இன்று அவர் நம்மிடம் இல்லை என்றாலும் அவருடைய நியாபகங்கள், அவர் செய்த உதவிகள் என நாள் தோறும் நம்மை சுற்றி வந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளுக்கு நாள் ஊடகங்களில் விஜயகாந்த் குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க பல நடிகைகள் மறுத்தனர். அவருடைய தோற்றம் , நிறம் இவைகளை காரணம் காட்டி பல நடிகைகள் இவருடன் நடிக்க மறுத்திருக்கின்றனர். ஆனால் ஒரு நடிகை மட்டும் விஜயகாந்துக்கு ஜோடியா? அப்படின்னா நான் நடிக்கிறேன் என முன்வந்து நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் ஹீரோ படம்… ஆனாலும் டைட்டிலில் பெயரை விட்டுக் கொடுத்த ரஜினி… அட பெரிய மனசுதான்!..
அவர் யாருமில்லை. நடிகை சரிதா. நடிப்பிற்கு பேர் போன நடிகைதான் சரிதா. ஹீரோயின் மெட்டீரியல் இல்லாத நடிகை சரிதா. ஆனால் நடிப்பு என்பதை மட்டும் வைத்துக் கொண்டு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பெரும்பாலும் ராதிகா, ராதா, அம்பிகா, ஸ்ரீதேவி என்றே பேசி கொண்டிருக்கிறோம்.
ஆனால் சரிதாவை பற்றி பெரும்பாலும் செய்திகளில் வருவது இல்லை. ஆனால் நடிப்பிற்கு பேர் போன நடிகையாகவே கருதப்பட்டவர் நடிகை சரிதா. எந்த கேரக்டர் ஆனாலும் துணிச்சலோடு நடிப்பவர். இவர் விஜயகாந்துடன் ஊமை விழிகள் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் மெட்டில் பிறந்த யுவனின் பாடல்… அப்போ 80ஸ்க்கு… இப்போ 2கே கிட்ஸ்க்கு… இதெப்படி இருக்கு?
முதலில் ஊமை விழிகள் படத்தில் சரிதா நடிக்க ஆர்வமில்லாமல்தான் இருந்தாராம். அதன் பின் விஜயகாந்துக்கு மனைவியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் விஜயகாந்துக்காக ஒகே சொல்லியிருக்கிறார் சரிதா. அந்தப் படம் விஜயகாந்துக்கும் சரி அதில் நடித்த மற்ற கலைஞர்களுக்கும் சரி ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதோடு சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.