அப்போ வாய மூடிட்டுதான இருந்தீங்க… Me Too குறித்து நடிகை சீதாவின் பகிர் குற்றச்சாட்டு…
தமிழ் சினிமா ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சீதா. அனைவரும் விரும்பும் குடும்ப பாங்கான திரைப்படத்தில் தனது சிரித்த முகத்துடன் நடித்திருப்பார். கல்யாணம் செய்தால் சீதாவை போல் பெண்தான் வேண்டுமென அந்த காலத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர்.
இவர் மேலும் மல்லு வேட்டி மைனர், மருது பாண்டி, புதியபாதை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில காலம் சினிமாவில் நடிக்காத இவர் காதல் அழிவதில்லை, மதுர, வியாபாரி போன்ற திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் வாசிங்க:சூர்யாவுக்கு விரிச்ச வலையில சிக்கிய அமீர்… பருத்திவீரனில் நடந்தது இதுதான்!…
இவர் நடிகர் பார்த்திபனின் மனைவியும் கூட. ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின் இவர் தொலைக்காட்சி நடிகரான சதீஷை திருமனம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் இவருக்கு நீடிக்கவில்லை.
இவர் பொதுவாக நேர்மறையான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க கூடியவர். அதை மட்டுமே இவர் விரும்புவாராம். எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு கடினமாய் இருக்குமாம். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் Me too குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க:பார்த்திபன் சொன்ன மொத்தமும் பொய்… உண்மையை உடைக்கும் சீதா… அட இதுதான் நடந்துச்சா!…
இன்று Me Tooவில் புகார் அளிக்கும் ஒவ்வொரு பெண்களும் நினைத்திருந்தால் அப்படி அவர்களது வாழ்க்கையில் பிரச்சினை வராமல் தடுத்திருக்க முடியும். ஆனால் எங்கு இதை பற்றி வெளியே சொன்னால் தனக்கு தேவையான வேலையோ, வாய்ப்போ போய்விடும் எனும் அச்சத்தில்தான் அதை பற்றி வெளியே சொல்வதில்லை.ஆனால் அந்த நேரத்தில் அதனை விட்டுவிட்டு ஒரு 10 ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிப்பது மிகப்பெரிய தவறு என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கவர்ச்சி, ஆசை என்பது மனிதனின் இயல்பு எனவும், ஒரு வேளை அந்த 10 வருட காலத்தில் சம்பந்தப்பட்டவர் பக்குவப்பட்டிருக்கலாம் எனவும் மேலும் 10 ஆண்டுகளில் அவர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ சிரமங்களை சந்தித்திருக்கலாம் என கூறியுள்ளார்.ஆனால் அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு ஒரு நிலைமைக்கு வந்தபின் அவர்களை பற்றி குறை கூறுவது மிகவும் தவறான விஷ்யம் எனவும் அவர் Me too குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க:உதவி கேட்டவரை கண்டுகொள்ளாமல் போன அஜித்… பின்னாடி அவர் செஞ்ச வேலைய பத்தி தெரியுமா?…