Vijay TVK: நாங்க கைவிட மாட்டோம்! நீ வா தல.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை

Published on: January 8, 2026
vijay (11)
---Advertisement---

விஜயின் கடைசி படத்திற்கா இப்படி நடக்கணும்? என விஜய் ரசிகர்கள் உட்பட பல பேர் வேதனையில் இருக்கிறார்கள். சினிமாவிற்கு விஜயின் பங்கு என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அந்த சினிமா இன்று விஜய்க்கு ஆதரவாக இல்லையே எனும் போது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு நடிகர் அல்லது நடிகை யாருமே விஜய்க்கு ஆதரவாகவோ அல்லது ஜனநாயகன் படத்தின் பிரச்சினைக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

விஜய் சினிமாவை விட்டு போவது சினிமாவிற்கு பேரிழப்பு என்று சொன்னவர்கள் யாருமே இப்போது சத்தமே இல்லாமல் இருக்கிறார்கள். நாளை படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று பட நிறுவனம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கிறோம் என்று கனத்த இதயத்துடன் அந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். சென்சார் பிரச்சினை சம்பந்தமான வழக்கை நாளை ஒத்தி வைத்திருந்தார்கள்.

Also Read

இதன் காரணமாகவே ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த 33 வருடங்களாக தமிழ் சினிமாவில் விஜயின் படங்கள் எவ்வளவு சம்பாதித்து கொடுத்தது என அனைவருக்குமே தெரியும். அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு போவது என்பது சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்புதான். ஒரு பக்கம் ரஜினியின் படங்கள், இன்னொரு பக்கம் விஜயின் படங்கள்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்தது.

ஆனால் இன்று விஜயின் நிலைமை மிகுந்த வேதனைக்குரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாக பேசினால் எங்க, நம் படமும் பிரச்சினைக்குள் மாட்டிவிடுமோ? அல்லது அரசியலை வைத்து நம்மையும் டார்கெட் செய்து விடுவார்களோ என்றும் நினைத்து பல பேர் வாயை மூடி இருக்கின்றனர். இதற்கிடையில் பிரபல நடிகை விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அநியாயத்தின் உச்ச கட்டம் இதெல்லாம். ஆனா நீங்க பண்ணுங்க. நீங்க பண்ண பண்ண அவங்க வளர்ந்து கொண்டேதான் இருப்பாங்க. ஏனெனில் நாங்க கைவிட மாட்டோம். பொங்கல் அன்று படம் வரலைனா என்ன? படம் வரும் நாள்தான் நமக்கு பொங்கல். சும்மாவே ஜனநாயகன் படம் வேற லெவல் ப்ளாக்பஸ்டர். என்னம்மோ நினைச்சு தெரியாம நீங்க பண்ண விஷயத்தால் சினிமா வரலாற்றிலேயே யாருமே மறக்க முடியாத, யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நாங்க பண்ணிக் காட்டுவோம்.

வெயிட் பண்ணுங்க. வெயிட் பண்ண நாங்க ரெடி. ஏனெனில் அதற்கு விஜய் தகுதியானவர். நீ வா தல… நாங்க இருக்கோம் என சனம் ஷெட்டி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.