‘குட் பேட் அக்லி’ படத்தின் ஹீரோயின் இவங்களா? யாரும் நினைக்காத காம்போ.. இளசுகளுக்கு குஷிதான்
Actor Ajith: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள் இயற்கை சும்மா விடவில்லை. அங்கு ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் படப்பிடிப்பை தள்ளி வைத்தார்கள். இதற்கு இடையில் லைக்கா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க அந்த நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் முதலில் வேட்டையன் திரைப்படத்தை முடித்து விட்டு அதன்பிறகு விடாமுயற்சி படத்தை கையில் எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சொன்னதை போலவே வேட்டையன் படத்தின் படப்பிடிப்பும் முடிந்தும் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டார்கள்.
இதையும் படிங்க: குடும்பத்தையே பிளாக்மெயில் செய்த கார்த்தி!.. சினிமாவுக்கு வர என்னா வேலை பார்த்திருக்காரு!..
இடையில் தேர்தல் நெருங்கியதால் அஜித் தேர்தலை முடித்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் மீதி 40 சதவீத படப்பிடிப்பு எஞ்சியிருக்கிறது. இதை எப்படியாவது ஜுன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விடாமுயற்சி படக்குழு இருக்கிறார்கள்.
ஏனெனில் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லி படத்தில் இணைகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏனெனில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டவுடன் அதன் ரிலீஸ் தேதியையும் கூடவே அறிவித்துவிட்டார்கள்.
இதையும் படிங்க: சனியன் ஒன்னுத்துக்கும் யூஸ் இல்ல!.. டோட்டலி வேஸ்ட்!.. ராதிகாவை திட்டித்தீர்த்த கமல்ஹாசன்!..
அடுத்த வருடம் பொங்கல் என்று அறிவித்துள்ளார்கள். அப்படி இருக்கையில் குட் பேட் அக்லி படத்தை சீக்கிரம் ஆரம்பித்தால்தான் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியும், இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஹீரோயின் யார் என்ற ஒரு செய்தி இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் வேறு யாருமில்லை. நடிகை ஸ்ரீலீலா என்று சொல்கிறார்கள். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் தெரியும்.