More
Categories: Entertainment News latest news

இவங்க விஷால் அண்ணியா?.. இல்லை வவ்வாலா தெரியலையே!.. இப்படி தலைகீழ தொங்கி தாறுமாறு பண்றாங்களே!..

நடிகர் விஷாலின் அண்ணன் மனைவியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள ஜிம் வீடியோ ரசிகர்களை தலை சுற்ற வைத்து விடுகிறது. அந்த அளவுக்கு வவ்வால் போல தலை கீழாக தொங்கி வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வருகிறார்.

40 வயதாகும் ஸ்ரேயா ரெட்டி கடந்த 2008ம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அமலா எனும் மகளும் இந்த தம்பதியினருக்கு உள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: முதல் பட ஹீரோவை மறக்காத நயன்தாரா!.. புதிய தொழில் தொடங்கியதும் யாரை அழைத்திருக்கிறார் பாருங்க!..

கடைசியாக தமிழில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் வெளியான சுழல் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். அடுத்ததாக பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.

40 வயதிலும் தனது உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க தீவிர உடற்பயிற்சியை செய்து வரும் ஸ்ரேயா ரெட்டி தற்போது பாக்ஸிங் பயிற்சியையும் அதிகமாக மேற்கொண்டு வருகிறார். பாக்ஸிங் பேக்கில் காலை போட்டு தொங்கியபடி அவர் செய்யும் லேட்டஸ்ட் வொர்க்கவுட் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த பொங்கலும் செம போர்!.. வரிசை கட்டியிருக்கும் 4 படங்கள்.. நாங்க ஊருக்கே போறோம் சிவாஜி!..

இளம் பெண்களே இப்படி ரிஸ்க்கான உடற்பயிற்சியை செய்வார்களா என நினைக்கத் தோன்றும் நிலையில், ஸ்ரேயா ரெட்டி வவ்வால் போல அசால்ட்டாக அந்தரத்தில் தலைகீழாக தொங்கும் வீடியோக்களை வெளியிட்டு வயித்தை கலக்க வைக்கிறார்.

மேலும், தனது கால்களை வைத்து பாக்ஸிங் பேகை ஒரு எத்து விடுறாரு பாருங்க, அதெல்லாம் வேறலெவல் வெறித்தனம் என ரசிகர்கள் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பிரபலங்கள் ரொம்பவே இன்ஸ்பயரா இருக்கீங்க மேம் என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CxvC4rDo8R9/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Published by
Saranya M

Recent Posts