இவங்கதான் இப்போ டாப்! விஜய், அஜித், கமல் வரிசையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா
Actress Trisha: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கோலோச்சி இருக்கும் நடிகை த்ரிஷா. இன்று வரை முன்னனி நடிகை என்ற அந்தஸ்தை இழக்காமல் நம்பர் ஒன் நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா ரசிகர்களை வெகுவாக கொள்ளை கொண்டவர். ஒரு சாதாரண துணை நடிகையாக நடித்த த்ரிஷா இன்று அனைத்து மொழிகளிலும் இவர்தான் டாப் ஹீரோயின்.
பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். விஜய், அஜித்துக்கு எப்போதுமே ஒரு ராசியான நடிகை த்ரிஷா. அதுவும் அஜித்துடன் நடித்த நான்கு படங்களுமே ஹிட். ரசிகர்கள் விரும்பும் நடிகையாகவே இப்போதுவரை இருந்து வருகிறார். தொடர்ந்து பிஸியாக இருந்த த்ரிஷாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் கொஞ்சம் நாள் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
இதையும் படிங்க: சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் ரேஷ்மாவா இது?!.. சும்மா திறந்து காட்டி மூடு ஏத்துறாரே!..
அந்த நேரத்தில் நயன்தாரா தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டார். அதன்பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. லியோவில் 14 வருடங்கள் கழித்து விஜய்க்கு ஜோடியாக மாறினார். அந்த ஜோடியை பார்க்கவே மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது.
அதன் பிறகு விடாமுயற்சியில் அஜித்துக்கு ஜோடியானார். அந்தப் படமும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. அடுத்ததாக கமலின் தக் லைஃப் படத்திலும் தன்னுடைய இடத்தை பிடித்துக் கொண்டார் த்ரிஷா. இப்படி அடுத்து அடுத்து பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் கமிட் ஆன த்ரிஷா இப்போது தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒருவழியா குடும்ப பிரச்னை எல்லாம் தீர்ந்துச்சு… அடுத்து என்ன இருக்கு… புதுசா கிளப்புவீங்களே!
தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு கூட்டணியாக அட்லீ - அல்லு அர்ஜூன் கூட்டணி அமைந்திருக்கிறது. அல்லு அர்ஜூனை வைத்து எந்த மாதிரியான ஒரு படைப்பை அட்லீ கொடுப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த படத்திலும் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக த்ரிஷாதான் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ தகவல் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.