More
Categories: Biggboss Tamil 7 Cinema News latest news

மூணு மாசம் ஒன்னா இருக்க முடியல! எப்படி இவன்கூட குடித்தனம் நடத்த முடியும்? வாயாலேயே வைலன்ஸ கக்கிய விசித்ரா

Actress Vichithra: விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் ஒரு ஒரு போட்டியாளர்கள் எவிக்ட் ஆக இப்போது இறுதிக் கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.

இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது ஃபினாலே டிக்கெட்டை வாங்கி விட வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளர்களும் முண்டியடித்து கடுமையாக போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பாட்டி மீது கோபமான முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்னைக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லங்கோ!

அதில் அர்ச்சனாவும் விஜய் வர்மாவும் இந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் இருவரையும் மற்ற போட்டியாளர்கள் ஒரு சில காரணம் கருதி வெளியேற்றி விட்டனர். அவர்கள்தான் இப்போது நடுவராக இருந்து போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் விசித்ராவுக்கும் தினேஷுக்கும் இடையேதான் அவ்வப்போது பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியானது. அதில் விசித்ரா தினேஷின் சொந்த வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: மேல ஏறாதீங்க! போலீஸ் சொன்னதையும் மீறி தடுப்பை தாண்டி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ‘கைதி’ பட நடிகர்

இவன் கூட  ஒரு மூணு மாசமே ஒன்னா இருக்க முடியல. எப்படி வாழ்க்கை முழுக்க குடித்தனம் நடத்த முடியும். நீ உன் வாழ்க்கையை பாருமா, நல்லா இருமா. என மறைமுகமாக ரட்சிதாவுக்கு சொன்ன மாதிரி அவர் பேசியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அவன பாக்கவே ஒரு மாதிரி இரிடேட் ஆகுது என்றும் எப்படித்தான் இவன் கூட டிராவல் பண்ண முடியும் என்றும் மிக கடுமையாக பேசியிருக்கிறார் விசித்ரா. சொந்த வாழ்க்கையை  பற்றி யாரும் விமர்சிக்க கூடாது என்ற வகையில் விசித்ரா இப்படி பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: செருப்பை தூக்கி வீசி எறிந்த ரசிகர்கள்! அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு நேர்ந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ

Published by
Rohini

Recent Posts