Connect with us

Cinema News

ஆதித்யா டிவி ஆங்கர் எல்லாம் சிம்புவை அசிங்கப்படுத்துறாங்களே!.. வைரலாகும் வீடியோ.. அதுதான் மேட்டரா?..

நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய பேட்டி வீடியோக்களை எல்லாம் இப்போது எடுத்து போட்டு மீம் மெட்டீரியலாக ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். அதிலும் அந்த ஒரு கவ், ஒரு மாடு பேச்சு வேறலெவலில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் மட்டுமே சிம்புவின் மாடு காமெடியை பேசி வந்த நிலையில், ஆதித்யா டிவியின் தொகுப்பாளரான அகல்யா வெங்கடேசன் தனது லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோவில் சிம்புவை  எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அசிங்கப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்கள் அட்டண்டன்ஸ் போட வாங்க!.. இந்த முறை மிஸ் ஆகாது.. விடாமுயற்சி அப்டேட் எப்போ தெரியுமா?

குளிர் பிரதேசத்தில் நண்பர் ஒருவர் அகல்யா வெங்கடேசனை பார்த்து ரொம்ப குளிரா இருக்கு ஒரு டீ குடிக்கலாமா என கேட்க, உடனடியாக சிம்பு போல மாறிவிட்டார் அகல்யா வெங்கடேசன். ”ஒரு கவ்.. ஒரு மாடு.. தன் குட்டிக்கு வச்சு இருக்க பாலை.. அதை கட்டிப்போட்டு கறந்து குடிக்கிறியே.. உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா” என சிம்பு பேசிய அந்த வீடியோவை போட்டு அலப்பறையை கிளப்ப, டீயை நான் வாங்கித்தரேன் என அந்த நண்பர் சொன்னதும், ஓசி குடிக்காக இவ்ளோ பில்டப் பண்ணது போல சரி வா போலாம் என அகல்யா வெங்கடேசன் கிளம்பும் காமெடி ரீல்ஸை தனுஷ் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து சிம்புவை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அட்லீயோட அடுத்த பட டிஸ்கஷன்!.. எந்த ஹீரோ கூட நடத்துறாரு பாருங்க!.. செம வைரலாகுது!..

கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்ததாக நடிகர் சிம்பு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் எஸ்டிஆர் 48 படம் வெளியானால் சிம்புவின் ரேஞ்சே மாறிவிடும் என்றும் சிவகார்த்திகேயன் எல்லாம் அடுத்த தளபதி இடத்தை சிம்பு, தனுஷ் இருக்கும் போது பிடிக்கவே முடியாது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C4cKZJqJq-p/

 

google news
Continue Reading

More in Cinema News

To Top