கோட் படத்துக்கு முழு கதையும் கேட்டபிறகு வெங்கட்பிரபுவிடம் விஜய் சொன்ன அந்த விஷயம்...!
கோட் படத்தைப் பொருத்த வரை விஜய் சாருக்கு முதல்ல முழு கதையும் சொல்லவே இல்லையாம். முதல் பாதி கதை தான் சொன்னாராம். விஜய் சாரைப் பொருத்தவரை முதல்லயே தெளிவா எல்லா விஷயத்தையும் சொல்லிறணும்.
அப்புறம் எதையும் மாத்தக்கூடாது என ரொம்பவே ஆர்வத்துடன் அந்த அனுபவங்களை இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் சொன்ன அந்த சிலிர்ப்பான அனுபவங்களைப் பாருங்க.
விஜய்கிட்ட கதை சொல்லறதுக்கு முன்னாடி வெங்கட்பிரபுவுக்கு ஒரு சின்ன பயம் இருந்ததாம். அவருக்குப் பிடிக்கிற மாதிரி கதை சொல்லணும். எங்காவது திக்கித் திணறிடக்கூடாதுன்னு கவனமா சொன்னேன். அதுக்கு அப்புறமா இன்னொரு வெர்ஷனையும் சொன்னேன்.
அவர் பயங்கர சீரியஸா கேட்பாரு. இல்லடா... இது கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கு. முதல்ல சொன்னதையே டெவலப் பண்ணுன்னு சொன்னாரு. அப்புறமா ரெடி பண்ணிட்டு வந்து கம்ப்ளீட்டா ஸ்க்ரீன்பிளேயோட சொன்னேன்.
பர்ஸ்ட் ஆஃப் சொன்னபோது பயங்கரமா சிரிச்சாங்க. அப்படியே தான் இருப்பாங்க. என்னடா நம்ம ஜோக்கே ஒர்க் ஆகலயேன்னு இருக்கும். அவங்க சிரிச்சா தான் அதுக்கு அப்புறம் இன்னும் மெருகேற்றி நாம பண்ண முடியும். நான் சொன்ன இன்டர்வல் பிளாக் ரொம்ப பிடிச்சது. அப்புறம் 2 மாசம் கழிச்சி தான் செகண்ட் ஆஃப் சொன்னேன். ஆனா கிளைமாக்ஸ் சொல்லல.
அவருக்கு ஃபுல் ஸ்கிரீன்பிளேவை பிராப்பரா சொல்லணும். இந்த ஷெடுல்லுக்கு முன்னாடி என்னென்ன முடிக்கிறோம்கறதையும் தெளிவா சொல்லணும். அப்புறம் பயங்கரமா பிரிப்பேர் பண்ணுவாங்க. பயங்கரமா ஹோம் ஒர்க் பண்ணுவாங்க. எல்லாமே பர்பக்டா இருக்கும். எந்த இடத்திலும் ஓபி அடிக்கவே முடியாது.
Also read: லியோவில் கமல்.. ‘கோட்’ல அஜித்தா? என்னப்பா சொல்றீங்க? உண்மையா?
ஸ்பாட்ல போய் டயலாக் எழுதுறது எல்லாம் வேலைக்கே ஆகாது. சின்ன சின்னதுன்னா சொல்லலாம். ஃபுல்லாவே மாத்த முடியாது. முன்னாடியே அவருக்குக் கொடுத்துடணும். செகண்ட் ஷெடுல் சொல்லும்போது தான் அவர் ஹேப்பி. கிளைமாக்ஸ்சுக்கு டைம் கொடுங்கன்னு சொன்னேன்.
அது தனி ஸ்கிரீன்பிளே. அந்த சீனுல வர்ற சில விஷயங்களை முன்னாடியே நான் எடுத்தேன். அப்போ என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே... எனக்கு இப்பவே கிளைமாக்ஸை சொல்லுன்னு சொன்னாரு. அப்புறம் கிளைமாக்ஸை எல்லாம் சொன்னதும் அவர் ஹேப்பி. கடைசில 'ஓகே. சூப்பர். வச்சி செஞ்சிரு'ன்னு சொல்லிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.