கொள்ளிக் கட்டையை எடுத்து தலைய சொறிஞ்ச கதையா போச்சு! சொல்லவும் மெல்லவும் முடியாம தவிக்கும் மக்கள் செல்வன்
Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பது என்பது மிகவும் கடினம். அதுவும் பிடித்த இடத்தை தக்க வைப்பது என்பது அதைவிட கடினம். இப்படி ஏகப்பட்ட கலைஞர்கள் நூலில் நடப்பதை போலத்தான் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒரு துணை நடிகராக தன் கெரியரை ஆரம்பித்து எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்தான் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் தான் விஜய் சேதுபதி யார் என புரியவைத்தது.
இதையும் படிங்க: இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்குறாரு! ‘பிக்பாஸில்’ கமல் பண்ண வேலைக்கு பதிலடி கொடுத்த நிர்வாகம்
அந்தப் படத்தின் வெற்றி அடுத்தப் படங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாக அவரை முன்னெடுக்க வைத்தது. தர்மதுரை, சேதுபதி, ரம்மி, பீட்சா, நானும் ரவுடிதான், சூது கவ்வும், காதலும் கடந்து போகும், இமைக்கா நொடிகள் என பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான ஹீரோவாக மாறினார் விஜய் சேதுபதி.
நடிப்பையும் தாண்டி ரசிகர்களிடமும் தன்னை சுற்றி இருப்பவர்களிடமும் அவர் காட்டும் அன்பு எப்பொழுதுமே அவரை நோக்கியே ஈர்க்க வைத்தது.இதனாலேயே அவரை மக்கள் செல்வன் என கொண்டாட ஆரம்பித்தார்கள்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் கெட்டினு நினைச்சா பக்கா மோசடியா இருக்காரே!.. புலம்பி தள்ளும் சீரியல் நடிகை மகாலட்சுமி!
இப்படி ஹீரோவாகவே தன்னை காட்டிக் கொண்டு வந்த விஜய்சேதுபதி பேட்ட படத்தில் முதன் முதலாக வில்லன் அவதாரம் எடுத்தார்.அந்த ஒரு படம் தான் இன்றுவரை விஜய்சேதுபதியை நம்மால் மறுபடியும் ஒரு ஹீரோவாக பார்க்க முடியாமல் செய்கிறது.
அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். மேலும் ரசிகர்களும் ஹீரோவா நடிப்பதை விட இவரின் வில்லத்தனத்தைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். நேற்று வெளியான ஜவான் படத்திலும் விஜய் சேதுபதியின் நடிப்பைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு மாஸ் வில்லனாக மிரட்டியிருக்கிறாராம் விஜய் சேதுபதி.
இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..
இதற்கிடையில் விஜய்சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதற்காக விஜய்சேதுபதியும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார். ‘ரொம்ப நாள் ஆச்சு. ஹீரோவாக நடித்து’ என்று கூட நினைத்திருப்பார். ஆனால் விதி யாரை விட்டது. ஜவான் படத்தில் இவரின் வில்லன் ரோலை பார்த்து தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 16வது படத்திற்கு விஜய்சேதுபதியைத்தான் வில்லனாக நடிக்க வைக்கிறார்களாம்.
போகிற போக்கை பார்த்தால் விஜய் சேதுபதி வில்லன் மெட்டீரியலாகவே மாறிவிடுவார் போலிருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.