More
Categories: Cinema News latest news

‘மகாராஜா’வின் வெற்றி எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க.. இயக்குனருக்கு ஏற்பட்ட நிலைமை?

Maharaja: நீண்ட நாளுக்கு பிறகு ஒரு ஹீரோவாக விஜய் சேதுபதி வெற்றி அடைந்திருக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் அவர் வில்லனாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்ற விஜய் சேதுபதி அதற்கு அடுத்ததாக அவர் ஹீரோவாக நடித்து வெளியான சங்கத் தலைவன், டி எஸ் பி போன்ற ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

அதனால் இனிமேல் விஜய் சேதுபதியால் வில்லனாக மட்டுமே ஜொலிக்க முடியும் என்ற ஒரு விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால் அதை எப்படியாவது பிரேக் செய்ய வேண்டும் என விஜய் சேதுபதியும் முயற்சித்து வந்தார். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது தான் இந்த மகாராஜா திரைப்படம். அதுவும் இவருக்கு அது 50 வது படமாக அமைந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: படத்துலதான் அப்படின்னா!.. நிஜத்துலயுமா?. காதலியை பிடித்து தள்ளி விட பார்த்த வில்லன் நடிகர்!..

இதுவரை வேறு எந்த பெரிய நடிகர்களுக்கும் அவர்களுடைய 50ஆவது திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையவில்லை. ஆனால் அஜித்திற்கு மங்காத்தா திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டு கொடுத்தது. அதற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதிக்கு தான் அவருடைய ஐம்பதாவது படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று தந்துள்ளது.

இந்த படத்தை இயக்கியவர்  நித்திலன். இவர் ஏற்கனவே குரங்கு பொம்மை என்ற படத்தை எடுத்தவர். அந்த படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருட காலம் காத்திருப்பதற்குப் பின் இந்த படம் அமைந்திருக்கிறது. இப்போது வெளியான தகவல் என்னவென்றால் மகாராஜா திரைப்படத்திற்கு முன்பாகவே நித்திலன் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை எடுப்பதாக இருந்ததாம்.

இதையும் படிங்க: அதான சும்மா இது நடக்குமா?! SK – சீமான் சந்திப்புக்கு பின்னனியில் இருக்கும் காரணம் இதுதான்!…

அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்ததாம். அது பெண்களை மையப்படுத்தி அமையும் படமாக இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த படம் ஆரம்பிக்கப்படாமல் இருக்க அதன் பிறகு தான் இந்த மகாராஜா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு நித்திலனுக்கு வந்திருக்கிறது. இப்போது மீண்டும் அந்த கதையை எடுக்கும் திட்டத்தில் நித்திலன் இறங்கி இருக்கிறாராம்.

ஆனால் நயன்தாரா வேண்டாம். வேற ஒரு நாயகியை வைத்து எடுக்கலாம் என்ற யோசனையிலும் நித்திலன் இருக்கிறாராம். இதைப் பற்றி கோடம்பாக்கத்தில்  ‘ஒரு ஹீரோ சென்ட்ரிக் படத்தை அதுவும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த ஒரு படத்தை கொடுத்துவிட்டு வுமன் செண்ட்ரிக் படத்தை எடுப்பதால் அவருடைய மார்க்கெட் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மகாராஜா திரைப்படத்தின் வெற்றி அடுத்த அடுத்த பெரிய ஹீரோக்களை வைத்து படத்தை எடுத்தால் தான் அவருக்கும் ஒரு நல்ல மார்க்கெட் சினிமாவில் இருக்கும். இதை கொஞ்சம் நித்திலன் யோசித்துப் பார்க்கலாம்’ என கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்… ஷங்கர் முதல்ல தேர்ந்தெடுத்தது இளையராஜாவாம்..!

Published by
Rohini

Recent Posts