படத்துலதான் அப்படின்னா!.. நிஜத்துலயுமா?. காதலியை பிடித்து தள்ளி விட பார்த்த வில்லன் நடிகர்!..

உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், மோதி விளையாடு என பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் வினய் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் திடீரென வில்லனாக மாறனார்.

அந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்த நிலையில், தொடர்ந்து வில்லனாகவே நடித்து வருகிறார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடித்த வினய், ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்ததாக இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஹனுமன் படத்திலும் இவர்தான் வில்லன்.

இதையும் படிங்க: அதான சும்மா இது நடக்குமா?! SK – சீமான் சந்திப்புக்கு பின்னனியில் இருக்கும் காரணம் இதுதான்!…

நடிகை விமலா ராமனை காதலித்து வரும் வினய் எப்போதோ அவரை திருமணம் செய்து கொள்வார் என்கிற கேள்விகள் அடிக்கடி எழுந்து வந்தாலும், இருவரும் திருமணத்தை தாண்டிய லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றே கூறுகின்றனர்.

வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள நிலையில், நீச்சல் குளம் ஒன்றில், நடிகை விமலா ராமனை வினய் தள்ளி விடுவது போலவும் உடனடியாக அவ்வளவு சீக்கிரமாக விட்டு விடுவேனா என்பது போல தாங்கிப் பிடிக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்… ஷங்கர் முதல்ல தேர்ந்தெடுத்தது இளையராஜாவாம்..!

அதை பார்த்த ரசிகர்கள், படத்தில் தான் வில்லனாக மிரட்டுகிறார்கள். காதலியிடமும் இப்படி நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். வினய் மற்றும் விமலா ராமன் இணைந்து சமீபத்தில், பிரைடல் வீடியோ ஷூட் ஒன்றையும் நடத்தி அந்த வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தனர்.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் விமலா ராமன் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை, சுந்தர் சி யின் இருட்டு, சோனியா அகர்வாலுடன் கிரான்மா என பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷை தொடர்ந்து அடுத்த விவகாரத்து அந்த ஹீரோவா?!.. என்னப்பா சொல்றீங்க!…

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C8b99hhytba/

 

Related Articles

Next Story