பொங்கல் ரிலீஸாக பராசக்தி படமும் ஜன நாயகன் திரைப்படமும் ஒன்றாக வெளியாக இருக்கின்றது. முதலில் ஜனவரி 14 ஆம் தேதி பராசக்தி படம் ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென அதன் அறிவிப்பை தேதியை படக்குழு மாற்றியது. ஜனவரி 10 ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவானதுதான் பராசக்தி.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதைதான் பராசக்தி. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திற்கிறார். படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சமீபத்தில்தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படத்தை புரோமோட் செய்யும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், பழங்காலத்தில் பயன்படுத்த பொருள்கள் என பொருட்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதை பார்க்கவே மக்கள் அலைமோதுகின்றனர். படத்தை புரோமோட் செய்ய படக்குழு கையாண்ட புது யுத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் படம் தணிக்கை குழுக்கு சென்றது. படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழு அதிகாரிகள் ஏகப்பட்ட காட்சிகளை கட் செய்ய வலுயுறுத்துகின்றனர். இந்தி எதிர்ப்பு பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை என்பதால் தணிக்கை குழு அதிகாரிகளின் கத்தரிக்கு படம் கந்தர்வ கோலாகலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதனை தொடர்ந்து ரிவைஸிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பியிருப்பதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. பராசக்திக்கே இந்த நிலைமைனா மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சித்தும் கூலி படத்துக்கு இணையான வன்முறை காட்சிகள் இருப்பதாகவும் உள்ளதால் ஜனநாயகன் படத்தின் நிலைமை என்ன ஆக போகிறதோ என்ற பயம் விஜய் ரசிகர்களுக்கு இப்போதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது.
இதற்கிடையில் ஒரு ஃபன் செய்துவிட்டு வரலாம் என ஜன நாயகன் படக்குழு மொத்தமாக மலேசியா கிளம்பியிருக்கிறது. நாளைதான் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா. அதற்காக தமிழ் சினிமாவில் இருந்து ஏராளமான பேர் அந்த விழாவை கண்டுகளிக்க கிளம்பி போய்க் கொண்டிருக்கின்றனர்.
