கேப்டனுக்கு அப்புறம் ஒரே வருடத்தில் 13 படங்கள்! இவரெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே – யார் அந்த நடிகர் தெரியுமா?

Published on: January 6, 2024
cap
---Advertisement---

Captain Vijayakanth:  தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் நடிக்க வருவதற்கு  முன்பே அவரது சொந்தவாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையோடுதான் இருந்திருக்கிறார்.

ரைஸ் மில் தொழிலதிபதியாக இருந்த போதே அனைவருக்கும் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்றுதான் நினைப்பாராம். அதன் பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கோடம்பாக்கம் வந்து சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரமே கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: அயலானுக்கு இந்நேரம் அல்லு விட்டுருக்குமே!.. தனுஷின் கேப்டன் மில்லர் டிரெய்லர் எப்படி இருக்கு?..

இருந்தாலும் பரவாயில்லை என்று சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விஜயகாந்தை மக்கள் முன் ஒரு எழுச்சி மிக்க நடிகராக காட்டியது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்கள்தான். அவர் பொதுவாகவே சமூகத்தின் மீது ஒரு வித அரசியல் பார்வை கொண்டவர்.

அதனால் இருவரும் சேர்ந்து ஒரு புரட்சி மிகுந்த படங்களை கொடுத்து விஜயகாந்தின் புகழ் தெரிய ஆரம்பித்தது. இதனால் விஜயகாந்த் மேலும் பிரபலமானார். பிஸியான நடிகராகவும் மாறினார். ஒரு வருடத்திற்கு 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு மிகவும் பிஸியாக இருந்தார் கேப்டன்.

இதையும் படிங்க: யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு

இரவில் ஒரு படத்தின் சூட்டிங். பகலில் ஒரு படத்தின் சூட்டிங் என தன் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷும் அதே பாணியைத்தான் பின்பற்றுவதாக தெரிகிறது.

அதாவது அவர் கைவசம் 13 படங்கள் இருக்கிறதாம். அதுவும் அவர் நடித்து ரிலீஸாகாமல் 13 படங்கள் என்று சொல்லப்படுகிறது. அதை எப்படியாவது இந்த வருடத்திற்குள் மொத்தமாக ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். அப்படி பார்த்தால் ஒரே வருடத்தில் அடுத்தடுத்த ஜிவியின் 13 படங்கள் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.