‘பில்லா’ படம் பார்த்து ரஜினி சொன்ன அந்த விஷயம்! தீயாய் பரவும் விஷ்ணுவர்தன் பேட்டி

by Rohini |
billa
X

billa

Billa Movie: அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் பில்லா. அதுவரை அஜித்தின் ஒரு சில படங்கள் தோல்வியையே கண்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட ஒரு சந்திப்பில் ரஜினி கொடுத்த ஐடியா தான் இந்த பில்லா திரைப்படம். நீங்கள் ஏன் என்னுடைய பில்லா படத்தின் ரீமேக்கில் நடிக்க கூடாது என அஜித்தை பார்த்து ரஜினி கேட்ட அந்த ஒரு விஷயம் தான் இன்று அஜித்தை ஒரு ஸ்டைலான மாஸ் ஹீரோவாக நம்மால் பார்க்க முடிகிறது.

பில்லா படத்திற்கு பிறகு தான் அஜித்தின் மீது ஒரு தனி கிரேஸ் உருவாகி இருக்கிறது. அவருடைய அந்த ஸ்வாக் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வருகிறது. அவருடைய ஸ்டைலான நடை, கோட் சூட், கூலிங் கிளாஸ் என பில்லா படத்தில் ஒரு ஹேண்ட்ஸ்மான ஹீரோவாக நடித்திருந்தார் அஜித். இந்த நிலையில் பில்லா படத்தை ரீ ரிலீஸ் செய்து மக்களுக்கு மீண்டும் விருந்து படைத்திருக்கிறது இந்த திரைப்படம்.

இதையும் படிங்க: பெத்த சம்பளமோ?… தனுஷ் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் இவர் தானாம்… உஷாரு தான் நீங்க…

சமீபகாலமாக ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன ஒரு சில படங்களை ரீ ரிலீஸ் என்ற பெயரில் அனைத்து திரையரங்குகளிலும் மறு ஒளிபரப்பு செய்து மக்களை குதுகலப்படுத்தி வருகிறார்கள் .அந்த வகையில் கில்லி திரைப்படம் அதற்கடுத்தபடியாக பில்லா திரைப்படம் என ரீ ரிலீசில் கலக்கிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் பில்லா திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் சமீபகாலமாக அனைத்து youtube சேனல்களிலும் தனது பேட்டியை கொடுத்து வருகிறார்.

அதில் அஜித்தை பற்றியும் பில்லா திரைப்படத்தில் அவர் அடைந்த அனுபவத்தை பற்றியும் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். திரைப்படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் விஷ்ணுவர்தன் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்தாராம். ஏவிஎம் ஸ்டுடியோவில் சிவாஜி படத்திற்காக ரஜினி அங்கே இருந்தாராம். உடனே ஏவிஎம் சரவணன் விஷ்ணுவர்தனிடம் ரஜினி உங்களை பார்க்க வேண்டும் என கூறுகிறார் என சொல்ல உடனே ஆட்டோவில் புறப்பட்டு வந்தாராம் விஷ்ணுவர்தன்.

இதையும் படிங்க: மொத்தமா கடையை சாத்திய ‘ரத்னம்’! ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா? பேயாட்டம் ஆடி விரட்டிய அரண்மனை 4

விஷ்ணுவர்தனிடம் ரஜினி ‘ட்ரெய்லரை பார்த்தேன். படம் வேற லெவலில் இருக்கிறது’ என சொன்னாராம். அது மட்டுமல்லாமல் பில்லா திரைப்படத்தின் பிரிவியூ காட்சியையும் ரஜினியை பார்க்க வைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். அந்த படம் முழுவதையும் பார்த்த பின்னர் ரஜினி விஷ்ணுவர்தனிடம் ‘என்ன ஒரு படம் பேசாமல் இந்த படத்தில் நானே நடித்திருக்கலாமே’எனக் கூறி அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு படத்தை வேற லெவலில் கொண்டு சென்று விட்டீர்கள் என பாராட்டினாராம் ரஜினி.

Next Story