Connect with us
ajith

Cinema News

ஏற்கனவே ஆடிய ஆட்டம் போதாதா? மீண்டும் அஜித்துடன் மல்லுக்கு நிக்கும் அந்த நடிகர் – வேகமெடுக்கும் ‘விடாமுயற்சி’

Vidamuyarchi: அஜித் நடிப்பில் பரபரப்பாக  நடந்து கொண்டிருக்கிறது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு. சமீபத்தில் அந்தப் படத்தில் கலை இயக்குனரான மிலனின் உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

படத்தில் சண்டை காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் படத்தில் இல்லையாம். மங்காத்தா படம் போன்ற பக்கா ஆக்‌ஷனை விடாமுயற்சியிலும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: ஊர் ஊராக அலைந்த பிரபல ஜோடி..! எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்ரைஸ்… இதுக்கு பின்னாடி இப்டி ஒரு கதை இருக்கா?

அதற்காக ஆக்‌ஷன் கிங் அர்ஜூனை வரவழைத்திருக்கிறார்கள். ஆம். விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜூன்தான் நடிக்கிறாராம். லியோ படத்தின் ப்ரோமோஷனுக்கு அர்ஜூனை அழைத்த போது தன் மகளுக்காக சொந்தப் படம் எடுப்பதால் வரமுடியாது என சொல்லி ஐதராபாத் சென்ற அர்ஜுன் அங்கு இருந்து அஜர்பைஜானுக்கு சென்றுவிட்டாராம்.

ஏற்கனவே அஜித்தும் அர்ஜூனும் சேர்ந்து மங்காத்தா படத்தில் நடத்திய ஆட்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை விடாமுயற்சி படம் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் இருக்கிற நடிகர் அஜித்! இவரே சொன்னதுக்கப்புறம் நோ அப்ஜெக்சன் – அடுத்த பாட்ஷாவா?

மேலும் மொத்தப் படப்பிடிப்பையும் அஜர்பைஜானிலேயே முடித்துவிடலாம் என அஜித் சொல்லியிருக்கிறாராம். ஜனவரி 30ல் படத்தை முடித்து ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இருக்கிறதாம். அதே தேதியில் தான் தளபதி 68ம் படமும் ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது. மீண்டும் அஜித்- விஜய் இடையேயான அந்த கடும் போட்டியை பார்க்கலாம் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top