ஐசு செயலால் கடுப்பில் இருக்கும் அமீர்..! அமீர் மீது கோபமாகி அன்பாலோ செய்த ஐசு குடும்பம்..! என்னங்கடா..!
Biggboss tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும் ஒவ்வொரு நாள் விஷயங்களே ரசிகர்களுக்கு செம அதிர்ச்சியை கொடுக்கும் நிலையில் தற்போது அமீரின் சமீபத்திய பேட்டியில் இருந்து இன்னும் சில முக்கிய தகவலும் கசிந்துள்ளது.
விஜய் டிவியில் நடன இயக்குனராக இருந்தவர் அமீர். இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். வைல்ட் கார்டாக உள்ளே வந்தவர் சக போட்டியாளரான பாவ்னியை காதலித்தார். இருந்தும் இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றி கண்டென்ட் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: தங்கலான் முதல் தளபதி 68 வரை!.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்!. ரிலீஸ் எப்போது தெரியுமா?
அதிலும் வெளியில் பிபி ஜோடிகளுக்கு நடந்த நடன நிகழ்ச்சியில் தான் ஓவர் காதலை அமீர் கொட்ட கடைசியில் பாவ்னி ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. பிபியில் அமீர் இருக்கும் போதே சைஜி மேம்மால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். எனக்காக நின்றவர்கள் எனப் பெருமையாக கூறி இருந்தார்.
அவர்களின் மூத்த மகள் தான் ஐஷு. தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு இருக்கிறார். கிட்டத்தட்ட நிக்சனுடன் அவர் இணைந்து செய்யும் கசமுசா ரகத்திலே இருப்பதால் அவர் பெற்றோர் முதல் அமீர் வரை கடுப்பில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதுகுறித்து அமீர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், நான் உள்ளே போனால் வெளியில் போட்டியாளர்களுக்கு அளித்திருக்கும் பெயரை அப்படியே கொண்டு போய் கொடுத்துடுவேன். நான் ஐஷு குடும்பத்தினரை மறக்கவே மாட்டேன். அவர்களை நான் அன்பாலோ செய்யவில்லை.
இதையும் படிங்க: தளபதியை சொல்றாங்க… சூப்பர்ஸ்டார் பட்டத்தையே இவரிடம் தான் ரஜினி ஆட்டைய போட்டாராம்..!