Categories: latest news

பாண்டிச்சேரியில இருந்துட்டு விஜயகாந்த் மறைவுக்கு வர முடியாதா?.. பெரிய கும்பிடு போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!..

நியூ இயர் பார்ட்டியை பாண்டிச்சேரியில் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேப்டன் மறைவு செய்தி அறிந்து சென்னைக்கு கூட வர முடியாதா என சமீபத்தில் அவரது பேட்டியை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

நாகர்கோயிலில் இருந்து ரஜினிகாந்த் ஃபிளைட் புடிச்சிட்டு வந்தாரு, ஹைதராபாத்தில் இருந்து விஜய்யும் இரவு நேரம் என்றும் பார்க்காமல் ஓடோடி வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்துல இருக்குற பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வர முடியவில்லை என பேசுவது எல்லாம் சுத்த மோசடித்தனம் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:  டப்பிங் முடிந்தது என நினைச்சு வெளிநாடு புறப்பட்ட கமல்! கடைசி நேரத்தில் அவருக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா?

மேலும், விஜயகாந்த் குறித்த கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பிய நிலையில், தான் இப்போது நகை கடை திறப்பு விழாவுக்காக சென்னை வந்திருக்கிறேன்.இதை பற்றி மட்டும் கேளுங்க எனக் கூறியுள்ளார். விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு பெரிய கும்பிடு போட்டு பதில் சொல்ல முடியாது என்றும் தான் ஊரில் இல்லை. பாண்டிச்சேரியில் சுழல் 2 ஷூட்டிங்கிற்காக இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்த கேள்விக்கும் அதே பதிலைத்தான் சொன்னார். எல்லாரும் உதவி பண்றதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்றும் அவரவர் விருப்பப்பட்டு செஞ்சாலே போதும் என்றும் நகை கடை திறப்பு விழா பற்றிய கேள்வியை மட்டும் கேளுங்க என கறாராக பேசி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு.. அஜித் போன் பண்ணியே பேசல!.. அதெல்லாம் சுத்த பொய்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!..

அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீங்க என்கிற கேள்விக்கு இப்போதைக்கு சுழல் 2 வெப்சீரிஸ் மட்டும் தான் நடிச்சிட்டு இருக்கேன் என்றும் பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான அரை டஜன் படங்கள் எல்லாமே படுதோல்வியை சந்தித்த நிலையில், புதிய பட வாய்ப்புகள் இல்லையா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago