Entertainment News
தலைவி இன்னைக்கு எங்கள காலி பண்ணிட்டீங்க!.. ஐஸ்வர்யா ராஜேஷின் நச் கிளிக்ஸ்!…
ஆந்திராவை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கு சினிமாவை விட தமிழ் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது போல. எனவே, அதற்கான தளத்தை மெதுவாக போட துவங்கினார்.
விஜய் டிவியில் நடந்த சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பா. ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்திலும் நடித்திருந்தார்.
அதன்பின் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்தது.
அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். தற்போதும் அதை தொடர்ந்து வருகிறார்.
பெரும்பாலும் கிராமத்து கதைக்குதான் அவரின் முகம் பொருந்துவதால் அது போன்ற வேடங்களே அவரை தேடி வருகிறது. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், ஐஸ்வர்யா ராஜேஷும் சக நடிகைகளை போல கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற சட்டையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.