More
Read more!
Categories: Entertainment News

மறுபடியும் அந்த வேலையை ஆரம்பிச்ச ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!.. என்னன்னு நீங்களே வந்து வீடியோவை பாருங்க!..

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரியப் போவதாக அறிவித்தது ரசிகர்களையும் இருவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகர் ரஜினிகாந்த் ரொம்பவே மனம் உடைந்து இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் முதல் திருமணத்தை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 17 வருடங்கள் கணவர் தனுஷ் உடன் வாக்ஷ்ந்து வருகிறாரே என சந்தோஷப்பட்டு வந்த ரஜினிகாந்த் இருவரது முடிவால் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தம்பி ஒரு விஷயம் சொல்லட்டுமா!.. பர்த்டேவுக்கு செம ட்ரீட் கொடுக்க ரெடியான சியான் விக்ரம்!..

தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க வேண்டும் என தனுஷ் ஆசைப்பட்ட நிலையில் அதை மறுத்து விட்டார் ரஜினிகாந்த். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த ரஜினிகாந்த் அந்த படம் சொதப்பிய நிலையில், மேலும் சங்கடத்தில் ஆழ்ந்தார்.

தனுஷை வைத்து 3, கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை போன்ற படங்களை எடுத்து தோல்வியை தழுவிய நிலையில் பல ஆண்டுகாலம் சினிமாவை இயக்குவதை விட்டு விலகி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: அந்த பார்வையே ஆள கொல்லுதே!.. நயனின் அழகை பார்த்து ஏங்கும் புள்ளிங்கோ!.. சூப்பர் பிக்ஸ்!..

அதன் பின்னர் கணவர் தனுஷை பிரிந்த நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அந்த படத்தை ரஜினி ரசிகர்களை பெரிதாக விரும்பிப் பார்த்து ஹிட்டாகவில்லை. வெறும் 16 கோடி மட்டுமே ஒட்டுமொத்தமாக வசூல் வந்ததாக தகவல்கள் வெளியாகின.

கேமியோவாக வந்த ரஜினிகாந்துக்கு சம்பளம் கொடுத்த அளவுக்கு கூட படத்தின் வசூல் வரவில்லையே என்பதால் அப்செட்டான தயாரிப்பு நிறுவனம் வேட்டையன் படத்தில் சேர்த்து வைத்து வேட்டையாடி விடலாம் என்கிற கணக்குடன் அமைதியாக உள்ளது.

இதையும் படிங்க: டேன்ஸ் மாஸ்டர் வீட்டுக்கே போய் விடிய விடிய பயிற்சி எடுத்த விஜய்!.. அட அந்த படத்துக்கா!…

மீண்டும் படம் இயக்குவார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒர்க்கவுட் வீடியோக்களை முன்பு போல வெளியிட ஆரம்பித்துள்ளார். டம்பிள்ஸை தூக்கி அவர் ஒர்க் அவுட் செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C50nUcqP4j-/

Published by
Saranya M

Recent Posts