ஐஸ்வர்யாவின் ஆசையில் மண்ணைப் போட்ட ஜெயம் ரவி!.. கல்லா கட்டுமா லால் சலாம்?...
laal salaam: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்து சினிமாவை கற்றுக்கொண்டவர். தனுஷை வைத்து 3 படத்தை எடுத்தார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதன்பின் அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
இப்போது தனுஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும், பல வருடங்கள் கழித்து லால் சலாம் என்கிற படத்தை இயக்கியிருகிறார். இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், மகள் கேட்டுக்கொண்டதால் ஒரு கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இவங்கள சமாளிக்க என்னலாம் உளற வேண்டி இருக்கு!… பூர்ணிமா இன்னும் எத்தனை நாளு இதயே உருட்டுவீங்க!…
கெஸ்ட் ரோல் என்றாலும் ரஜினியை முன்னிறுத்தியே இப்படத்தின் வியாபாரங்கள் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கே இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், சில காட்சிகள் அடங்கிய புட்டேஜ் காணாமல் போய்விட்டதாக சொல்லப்பட்டது. அதனால், பொங்கலுக்கு தள்ளிப்போனது.
ஆனால், இப்படத்தில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமைகள் விற்கப்படாமல் இருந்ததால் பொங்கலுக்கு இப்படம் வெளியாகவில்லை. அதன்பின் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனிடம் ரஜினி பேசியதால் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கிகொண்டது. அதன்பின்னரே இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோலிவுட்டின் ராசியான நடிகையே இவங்க தானாம்!.. ஹாட்ரிக் ஹிட் கொடுத்தா அல்வா போல அள்ளிடுவாங்களே!..
விரைவில் இப்படத்தின் ஓடிடி உரிமையும் விற்பனை ஆகும் என சொல்லப்படுகிறது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் பொங்கலுக்கு வெளியாகிவிட்டதால் பிப்ரவரி 9ம் தேதி எந்த படத்துடன் போட்டி இல்லாமல் இப்படத்தை வெளியிடலாம் என திட்டம் போட்டிருந்தார் ஐஸ்வர்யா.
ஆனால், அந்த தேதியில் ஜெயம் ரவி தனது நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தை களமிறக்க உள்ளாராம். இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பக்கா திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது. எனவே, அப்செட்டில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.
இதையும் படிங்க: அடிவாங்கிய அன்னபூரணி.. இதுக்கு மேல முடியாது!.. பெரிய கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!..