Connect with us

Biggboss Tamil 7

இவங்கள சமாளிக்க என்னலாம் உளற வேண்டி இருக்கு!… பூர்ணிமா இன்னும் எத்தனை நாளு இதயே உருட்டுவீங்க!…

Poornima Ravi: பிக்பாஸ் சீசன் 7 முடிந்து விட்டாலும் இன்னும் என்னத்த பேசுறதுனு தெரியாம புல்லி கேங் செய்யும் அட்ராசிட்டிகளால் ரசிகர்களுக்கு செம காமெடி கியாரண்டியாகி விட்டதாக கலாய்த்துவருகின்றனர். அதுலையும் ஒரே உருட்டை தான் மீண்டும் உருட்டிவருகின்றனர்.

இந்த சீசன்கள் அதிகம் அடிப்பட்ட பெயர் என்றால் அது புல்லி கேங் தான். அதிலும் மாயா மற்றும் பூர்ணிமா பெயர் தான் மோசமாக அடிப்பட்டது. கிட்டத்தட்ட இவர்களின் நடவடிக்கைகளும் ரசிகர்களுக்கு வெறுப்பை விதைப்பதாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் எப்படா வெளியில் போவாங்க என ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருந்தனர்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..

ஆனால் ஒவ்வொரு வாரமும் எதோ காரணத்தால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் ஜஸ்ட் எஸ்கேப்பிலே தப்பி தப்பி பைனல் வரை வந்தனர். ஆனால் டைட்டில் தங்களுக்கு இல்லை என்பதை சரியாக கணித்த பூர்ணிமா 16லட்சம் பணப்பெட்டியுடன் சரியாக வெளியேறினார். கடைசி போட்டியில் இணைந்தார் மாயா.

கொஞ்சம் மெதப்பை குறைத்தவருக்கு வேட்டாக வந்தது பழைய போட்டியாளர்கள் தான். சும்மா இருந்தவரை கிட்டத்தட்ட மீண்டும் முருங்கை மரத்துக்கு ஏத்திவிட்டு செல்ல கடைசியில் மாயாவுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. வெளியில் வந்து சில நாட்கள் அமைதியாக இருந்த மாயா அர்ச்சனாவுக்கும், தன் நண்பர்களுக்கு ட்வீட் போட்டு இருந்தார்.

இதையும் படிங்க: கோலிவுட்டின் ராசியான நடிகையே இவங்க தானாம்!.. ஹாட்ரிக் ஹிட் கொடுத்தா அல்வா போல அள்ளிடுவாங்களே!..

அந்த ட்வீட்டில் நான் முன்னவே சொன்ன மாதிரி வெல்வதை விட சர்வைவ் செய்யணும். அதான் முக்கியம் என அவருக்காக முதல் காயை நகர்த்தி 5 போட்டியாளர்களுக்கும் தனியாக வாழ்த்தி இருந்தார். இப்படியே வாழ்த்திக்கிட்டே இருந்தா எப்படி? எப்படியும் உங்களை கழுவி ஊத்துறது இப்போ நிறுத்த மாட்டாங்க என ரசிகர்களும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

புல்லி கேங் டீமே ஒவ்வொரு பதிவிலும் ஜெயிப்பது பெரிய விஷயம் இல்லை உள்ளே இருக்கணும். அதை நாங்களும் செஞ்சிட்டோம். அதுனால நாங்களும் வின்னர் தான் என்பதை எல்லா இடத்திலையும் பதிவு செய்துக் கொண்டே இருப்பது ரசிகர்களுக்கே கொஞ்சம் கடுப்பை தருவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top