உங்களாலதான் லால்சலாம் படம் ஓடல!.. பழியை தூக்கிய யார் மேல போட்டிருக்காங்க பாருங்க ஐஸ்வர்யா!..

Published on: February 21, 2024
lal salaam
---Advertisement---

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் செல்வராகவன் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து இயக்கம் பற்றி தெரிந்து கொண்டார். கணவர் தனுஷை வைத்து 3 என்கிற படத்தை எடுத்தார்.

இந்த படம் சரியாக ஓடவில்லை. அதன்பின் சில வருடங்கள் கழித்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. அதன்பின் பல வருடங்கள் கழித்து லால் சலாம் என்கிற படத்தை உருவாக்கினார்.

இதையும் படிங்க: அஜித்தை அடிக்க வச்சாரு.. விஜயை? ‘கோட்’ படத்தில் நடந்த ஜாலியான சம்பவத்தை கூறிய வைபவ்

இந்த படத்தில் தனது அப்பா ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என சொன்னதும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஒத்துக்கொண்டது. அதர்வா, விக்ராந்த் ஆகியோரை வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அதர்வா விலகிக்கொள்ள அவருக்கு பதில் விஷ்ணு விஷால் நடித்தார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரஜினி, லைக்கா தயாரிப்பு என பெரிய தலைகள் கூட்டணியோடு இப்படம் உருவானது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்களும் நன்றாகவே இருந்து. ஆனால், என்ன காரணமோ இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க: மணிரத்னம் முதல் மனோபாலா வரை!.. கோலிவுட்டின் முன்னணி பிரபலங்களை தூக்கிவிட்ட இசைஞானி…

படம் வெளியாகி 10 நாள் ஆகியும் தமிழகத்தில் வெறும் 10 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இப்போது, தமிழகத்தில் 17 கோடியும், உலக அளவில் மொத்தம் 29 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்து லால் சலாம் படம் படுதோல்வி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் அப்செட் ஆன ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை லைக்கா நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சரியாக புரமோஷன் செய்யவில்லை அதனால்தான் இப்படம் தோல்வி அடைந்திருக்கிறது என லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனிடம் கூறியிருக்கிறார். அவரும், சென்னையில் உள்ள லைக்கா அலுவலகத்தில் உள்ள நபர்களிடம் கோபத்தை காட்டியிருக்கிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.