Connect with us
venkat

Cinema News

அஜித்தை அடிக்க வச்சாரு.. விஜயை? ‘கோட்’ படத்தில் நடந்த ஜாலியான சம்பவத்தை கூறிய வைபவ்

Goat Movie: விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிப்பில் படம் தாறுமாறாக தயாராகிக் கொண்டிருக்கின்றது.

படத்தில் இவர்களுடன் சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி போன்ற முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஏதோ ஒரு புதிய தொழில் நுட்பத்தில் விஜயை மிகவும் இளமையாகவும் காட்ட போகிறார்கள் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: கவுன்சிலருடன் ஒரு போட்டோக்கே யோசித்த திரிஷா… கூவத்தூர் சம்பவத்துக்கு இந்த லாஜிக் சரியாக இருக்கே?

படப்பிடிப்பு சென்னையில் நடப்பதால் அடிக்கடி ரசிகர்களையும் விஜய் சந்தித்து வருகிறார். அப்போது மீசை இல்லாமல் விஜய் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார். இந்த நிலையில் படத்தில் நடிக்கும் வைபவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கோட் படத்தில் நடந்த சில காமெடியான விஷயங்களை பகிர்ந்தார்.

அதாவது மங்காத்தா படத்தில் அஜித்தை கழுத்தில் அறைந்து வைபவ் தள்ளி விடுவார். அதே போல் வெங்கட் பிரபு விஜயையும் அடிக்க வைத்தாரா? என்ற கேள்வி வைபவ்விடம் கேட்கப்பட்டது. அதற்கு வைபவ் ‘எடுத்திருக்கலாம். எனக்கு மறந்து போச்சு. டிசம்பரில் சூட்டிங் போனேன். மறுபடியும் இப்போதான் போகிறேன். எனக்கே தெரியவில்லை’ என்று கூறினார்.

இதையும் படிங்க: பாலசந்தருக்கு ரஜினி கமல் செய்யாததை நான் செஞ்சிருக்கேன்! வாழ்நாள் பாக்கியமாக கருதிய நடிகர்

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் விஜயிடம் நெருங்கவே விடமாட்டாராம் வெங்கட் பிரபு. ஏனெனில் பிரேம்ஜி, வைபவ் போன்ற ஆள்கள் போனாலே செட் கலகலப்பாக மாறிவிடுகிறதாம். அதனால் விஜய் சிரித்து விடுகிறாராம். அதனால் விஜய் கிட்ட நெருங்கவே விடவில்லை என்றும் ஆனால் விஜய் மிகவும் ரசித்து இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் படம் கண்டிப்பாக பக்கா ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் என்றும் வைபவ் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top