மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்! இதென்ன சோதனை?..

Published on: March 7, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். சமீபகாலமாக யாரையும் சந்திக்க விரும்பாத அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று வெளியான தகவலின் படி லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக முதலில் வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு விடாமுயற்சி படத்தை தொடங்குவோம் என்ற முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: லால் சலாம் வசூலை அடித்து காலி செய்த மஞ்சும்மெல் பாய்ஸ்!… இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை!..

சில தினங்களாகவே அஜித் சென்னையில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட தன் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை தன் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார் அஜித். அது சம்பந்தமான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இன்று திடீரென அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி காட்டுத்தீப் போல பரவ அஜித் வழக்கமான செக்கப்பிற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே உடம்பில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் அடிக்கடி செக்கப்பிற்கு செல்வது அஜித் வழக்கமாக கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் வரிகளை மாற்றிய கங்கை அமரன்!.. கடுப்பாகி கத்திய இளையராஜா!…

அதே மாதிரியான ஒரு செக்கப் தான் என தகவல்கள் கூறியிருக்கின்றது. இருந்தாலும் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தியை கேட்டதும் அவரது ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் ஆளாகி விட்டனர். அஜித்துக்கு ஏதாவது ஒன்னுனா தாங்க முடியாத ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்தான் அஜித்.

இன்னும் சிலர் விடாமுயற்சி அப்டேட்டை விட மற்ற எல்லா அப்டேட்டும் வருகிறது என கிண்டலடித்தும் வருகிறார்கள். இருந்தாலும் பூரண குணமடைந்து நலமுடன் அஜித் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ரெஸ்டாரெண்ட் பங்ஷனில் யார் ஜெயிக்க போறாங்க? கோபியா? பாக்கியாவா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.