Connect with us
manjummel

Cinema News

லால் சலாம் வசூலை அடித்து காலி செய்த மஞ்சும்மெல் பாய்ஸ்!… இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை!..

கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்கள் தமிழகத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி 100 கோடி வசூலை பெறுவதெல்லாம் நடந்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற தெலுங்கு படங்களும், கேஜிஎப், கேஜிஎப்2, காந்தாரா போன்ற கன்னட மொழி படங்களும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், ஹிந்தி மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தமிழகத்தில் பெரிய வசூலை பெறுவதில்லை. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் கூட தமிழ்நாட்டில் வசூலில் மண்ணை கவ்வியது. இந்நிலையில்தான், மலையாள திரைப்படமான மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழகத்தில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இதையும் படிங்க: வேறலெவல் மிரட்டலா இருக்கே.. சச்சின் பந்து போட சூர்யா பேட் ஆடுறாரே!.. இது எப்போ நடந்துச்சு!..

கமலின் நடிப்பில் வெளிவந்த குணா படத்தில் இடம் பெற்ற குகையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சர்வைவர் திரில்லராக வெளிவந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்திருக்கிறது. இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து அவர்களோடு உரையாடிய வீடியோவும் வெளியானது.

manjummel

அதேபோல், நடிகர்கள் தனுஷ் மற்றும் விக்ரம் இருவரும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டி பேசியிருந்தனர். அதோடு, சிதம்பரம் இயக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவும் ஒப்புகொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது மஞ்ச்சுமெல் பாய்ஸ்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா உலகில் கதைக்கு பஞ்சமா?… வழிகாட்டுகிறது மஞ்சும்மெல் பாய்ஸ்!… பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

மேலும், தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பே 10 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்நிலையில், மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழகத்தில் 15 கோடி வசூலை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்தும் வெளிவந்த லால் சலாம் படத்தின் வசூல் தமிழகத்தில் 15 கோடி மட்டுமே.

இந்நிலையில், லால் சலாம் வசூலை மஞ்சும்மெல் பாய்ஸ் படம் தாண்டிவிட்டது என சொல்லப்படுகிறது. இதை பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட ரஜினி ரசிகர்கள் கோபமடைந்து வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top