More
Categories: Cinema News latest news

அதெல்லாம் விஜய்க்குத்தான் செட்டாகும்! அஜித்தை வைத்து புது முயற்சி எடுக்கப் போகும் ஆதிக் – பாக்க முடியுமா?

Actor Ajith: அஜித் தனது விடாமுயற்சி படத்தின் இரண்டாம்  கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ளார். கூடவே த்ரிஷாவும் சென்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தான் அர்ஜூன் மற்றும் த்ரிஷாவுடனான காம்பினேஷன் அஜித்துடன் இருக்கப் போவதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படம் வருமா வராதா என்ற சந்தேகத்திலேயே இருந்து ரசிகர்களுக்கு அவ்வப்போது அஜித் அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் அப்டேட் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் விமான நிலையத்தில் வரும் காட்சி வீடியோ வைரலானது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இதுதான் கடைசி… இனிமே பிக்பாஸ் பக்கமே வரமாட்டேன் போங்கடா… கடுப்பான கமல்ஹாசன்..!

அவர் படம் நடிக்க வில்லை என்றாலும் இந்த மாதிரி அவ்வப்போது தரிசனம் கொடுத்தாலே போதும் என்ற மன நிலையில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தளவுக்கு அஜித் மீது அதிகளவு அன்பை பொழிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதைப் பற்றிய பேச்சுத்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

படம் எந்த மாதிரியான படமாக இருக்கப் போகிறது என்ற ஆர்வமும் இப்போதிலிருந்தே ரசிகர்களிடம் உருவாகி விட்டது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் தீவிர ரசிகர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். அதனால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.

இதையும் படிங்க: சும்மா இல்லாம போய் குட்டு வாங்கிட்டு வந்த மன்சூர் அலிகான்.. த்ரிஷா வழக்கில் என்ன நடந்தது தெரியுமா?

இந்த நிலையில் அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய ஒரு சிறிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக இருக்க போவதாக கூறப்படுகிறது. இதுவே ஒரு விதத்தில் அஜித்திற்கு ஒரு மைனஸ் தான். ஏனெனில் அஜித்திற்கு  அந்தளவுக்கு ஹுயூமர் என்பது எட்டாக் கனியாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது முழு நீள நகைச்சுவை படம் என்பது எந்தளவு சாத்தியமாகும் என்று கூறுகிறார்கள்.

 

Published by
Rohini

Recent Posts