கமல்-ரஜினி போல அஜித்-விஜய் ஏன் செய்வது இல்லை?.. செஞ்சா அவங்க பொழப்பு என்னாவது!..

by Akhilan |   ( Updated:2023-11-28 09:02:44  )
கமல்-ரஜினி போல அஜித்-விஜய் ஏன் செய்வது இல்லை?.. செஞ்சா அவங்க பொழப்பு என்னாவது!..
X

AjithvsVijay: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் விரோதபோக்குக்கு காரணம் இதுதான் என பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

கோலிவுட்டில் ஒவ்வொரு தலைமுறையிலும் இரண்டு நாயகர்கள் மிகப்பெரிய லெவலில் இருப்பார்கள். அவர்களின் ரசிகர்கள் அடித்து கொள்வதும் நடக்கும் தொடர்கதையாக இருக்கிறது. இதில் மற்ற தலைமுறை கலைஞர்களின் ரசிகர்களை விட அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை குறைவதே இல்லை. போக போக கொடூரமாக திட்டி கொள்வதுமாக தான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: யோசிக்காமல் அகத்தியனுக்கு மணிவண்ணன் செய்த உதவி… கடைசியில் காலம் கொடுத்த சர்ப்ரைஸ்..!

ஆனால் இவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஒற்றுமையாக இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய படங்களில் இணைந்து நடித்து இருந்தனர். சமீபத்தில் கூட ஒரு படப்பிடிப்பின் போது இருவரும் சந்தித்துக்கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். ஆனால் இப்படி சந்திப்பு அஜித் மற்றும் விஜய் இடையே இதற்கு முன்னர் பல வருடங்களுக்கு முன்னர் தான் நடந்தது.

அப்படி ஒரு புகைப்படம் வெளியிட்டால் சண்டை ஓயுமே என திரை விமர்சகர் அந்தணனிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஓயக்கூடாது தான் அப்படி எந்த புகைப்படமும் அவர்கள் வெளியிடுவதில்லை. அந்தந்த நடிகர்களின் ஐடி விங்கும் தான் இந்த சண்டையை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பருத்தி வீரன் பிரச்னையில் என்ன தான் நடந்தது? சூர்யாவே இத்தனை மோசமா? திரை விமர்சகர் உடைத்த உண்மை..!

அப்படி புகைப்படத்தினை போட்டு விட்டால் எல்லாம் சமாதானம் ஆகிவிடுவார்கள். அது தேவையில்லாத காரியம். சண்டை இருந்தால் தான் ஒரு பரபரப்பு இருக்கும். அப்போது தான் இருவருக்குமான மார்க்கெட் உயரும். விஜய் படத்தினை யாருமே திட்டாத போது ஒரு ஐடியில் இருந்து தப்பா ட்வீட் வரும்.

இதேதான் அஜித் படத்துக்கு நடக்கும். இது சாதாரண ரசிகர்கள் செய்வது இல்லை. நடிகர்களின் ஐடி விங்கில் இருந்து தான் இதை செய்து வருகின்றனர். இதற்கு முன்னும் இது நடந்தது. ஆனால் அவர்கள் சோஷியல் மீடியாவில் இல்லாமல் டீக்கடையில் சண்டை போட்டு கொண்டனர் எனக் குறிப்பிட்டார்.

Next Story